ரூட்ட மாத்து: இது அமெரிக்கா- பிரிட்டன் ஸ்டைல்
வாஷிங்டன்:
ஈராக் மீது போர் தொடுக்க ஆதரவு கிடைக்காததால் பாலஸ்தீனப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளதுஅமெரிக்கா.
பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப் போவதாகவும் மிக விரைவில் அதற்கான திட்டம்அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். இதையே பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரும்கூறியுள்ளார்.
ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அதைத் தாக்கும் அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளில்பலவும் இஸ்ரேலிடமும் அதே போன்ற ஆயுதங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளன. அதை ஏன் அமெரிக்காபறிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈராக் மீதான தாக்குதலை பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பகுதியாகவே புஷ் கூறி வருகிறார். இந்தசர்வதேச பயங்கரவாதத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலைஅமெரிக்கா ஆதரிப்பது ஏன் என்ற கேள்விகள் உரக்கத் தொடங்கிவிட்டன.
மேலும் பாலஸ்தீன விவகாரத்தைக் கிளப்பினால் ஈராக்கைத் தாக்க தனக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுதனக்குக் கிடைக்கும் என அமெரிக்கா கருதுகிறது. இது தவிர ஈராக்கை அமெரிக்கா தாக்கினால் பதிலுக்கு ஈராக்இஸ்ரேலைத் தாக்கும். அப்போது பாலஸ்தீன விவகாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
ஈராக்கில் தாக்குதல் நடத்தப் போய் பாலஸ்தீனப் பிரச்சனையில் அமெரிக்கா சிக்கும். இதைத் தவிர்க்கவே இந்தநேரம் பார்த்து பாலஸ்தீனப் பிரச்சனைக்கு தீர்வு காண திட்டம் வகுத்துள்ளதாக புஷ் கூறுயுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் இத்தனை நாட்களாக இஸ்ரேலின் மனிதாபிமானமில்லாத தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருந்துவந்த புஷ் திடீரென பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முக்கிய செயல் திட்டத்தை வகுத்திருப்பதாகவும் அதைவிரைவில் வெளியிடப் போவதாகவும் கூறினார். பாலஸ்தானத்தின் புதிய பிரதமர் பதவியேற்றவுடன் இத் திட்டம்குறித்து விளக்குவோம் என்றார்.
இதை நிருபர்களிடம் தெரிவித்த புஷ், மேற்கொண்டு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அதே போல பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் லண்டனில் திடீரென சில நிருபர்களை மட்டும் அழைத்துபாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமெரிக்காவுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளதாதவும் அதை விரைவில்தெரிவிப்போம் என்றார். அவரும் இது தொடர்பான நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
ஈராக் விவகாரத்தில் பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாட்டைத் தீர்க்க பாலஸ்தீன விவகாரத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் பயன்படுத்தவுள்ளன.
பாலஸ்தீனர்களிடம் நம்பிக்கையில்லை:
இஸ்ரேலிய ராணுவத்தினரால் பெரும் கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் பாலஸ்தீனியர்கள் அமெரிக்க-பிரிட்டன் நாடுகளின் இந்த புதிய அறிவிப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர்.
பாலஸ்தீன தொழிலாளர்துறை அமைச்சர் கஸ்ஸான் அல் கதிப் கூறுகையில்,
விவரத்தையே வெளியிடாமல் சும்மா பிரச்சனைக்குத் தீர்வு காண திட்டம் வகுத்துள்ளதாகக் கூறுவது ஏமாற்றுவேலையாகவே படுகிறது. ஈராக் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இந்த இருநாடுகளும் திடீரென எங்கள் பிரச்சனை பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளன. இதனால் அவர்கள் மீது நம்பிக்கைவருவதை விட அதிக சந்தேகம் தான் வருகிறது என்றார்.
ரஷ்யா ஆதரவு:
இந் நிலையில் பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக அமெரிக்க- பிரிட்டன் நாடுகளின் அறிவிப்பை ரஷ்யாவரவேற்றுள்ளது.
பாலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அவ்வப்போது பாலஸ்தீனியர்கள்இஸ்ரேல் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவம், இதையடுத்து பாலஸ்தீன பகுதிகளில் நுழையும் இஸ்ரேலியடாங்கிகள் பொது மக்களின் வீடுகளைத் தகர்ப்பதும், பெண்கள், சிறுவர்களை சுட்டுக் கொல்வதும்,ஹொலிகாப்டர்களைக் கொண்டு கார்களைத் தாக்குவதும் என மோதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
அல்-கொய்தா உள்ளிட்ட சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் இந்த விவகாரத்தை காரணமாக வைத்துத்தான் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


