For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் "கிடுகிடு" உயர்வு
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது பெட்ரோல், டீசல் விலைகள்உயர்த்தப்பட்டன.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயரஆரம்பிக்கவே, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இந்திய பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்ஆகியவற்றின் விலைகளைக் கடுமையாக உயர்த்தியுள்ளன.
ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.1.50 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ.1வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் ரூ.34.89ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நேற்று நள்ளிரவு முதல்ரூ.36.39ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.23.28லிருந்து ரூ.24.28ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.


