மின் கட்டண உயர்வு: 24ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்
சென்னை:
மின் கட்டண உயர்வை எதிர்த்து வரும் 24ம் தேதி மின்சார வாரிய அலுவலகங்களுக்கு முன்பாகப்போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வரும் 24ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக கம்யூனிஸ்ட்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர். நல்லக்கண்ணு மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் என். வரதராஜன் ஆகியோர் சென்னையில் கூட்டாகவெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் தாரை வார்க்கும் முதல் முயற்சியாகத்தான் மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதும்வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளால்இந்த இலவச மின்சார ரத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.
எனவே மின் கட்டண உயர்வு மற்றும் இலவச மின்சார ரத்து ஆகியவற்றைக் கண்டித்து வரும் 24ம்தேதி தமிழகத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகங்களின் முன் போராட்டம் நடத்தப்படும் என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சியில் இன்று நிருபர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, மின் கட்டண உயர்வைதமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். வரும் 21ம் தேதி தொடங்கவுள்ளபட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்தப் பிரச்சனையை சட்டசபையில் எழுப்புவோம் என்றார்.


