For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போருக்கு எதிராக சென்னை, பெங்களூர், காஷ்மீரில் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சான்பிரான்சிஸ்கோ:

ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில்ஒத்துழையாமை போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

சான்பிரான்சிஸ்கோவில் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பலபல்கலைக்கழக மாணவர்களும் போராட்டததில் குதித்துள்ளனர்.

போஸ்டனில் சுமார் 4,000 போராட்டக்காரர்கள் சார்லஸ் நதியின் குறுக்கே உள்ள மசாசூசெட்ஸ் அவென்யூ பாலத்தை முற்றுகையிட்டனர்.இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

லாஸ் ஏன்ஜெல்ஸ், மியாமி, டல்லஸ், சான் ஜூயான், பியூட்டோ ரிகோ ஆகிய இடங்களிலும் போராட்டம் நடந்தது. நியூயார்க்கின் டைம்ஸ்ஸ்கொயரில் பலத்த மழைக்கு இடையிலும் ஆயிரக்கணகான மக்கள் போராட்டம் நடத்தினர்.

அதே போல அர்ஜென்டினா, இந்தோனேஷியா, ஜோர்டன், ஈக்வடோர், இத்தாலி, ரோம், கிரீஸ, ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள்நடந்து வருகின்றன. இந்த நாடுகளில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதலும் வெடித்தது.

பல நாடுகளில் ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கட்டடத் தொழிலாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டத்தில்ஈடுபட்டனர்.

ஜெர்மனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் வெளியிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெர்லின் நகரில்சுமார் 10,000 பேர் அமைதிப் பேரணி நடத்தினர். அதே போல மலேசியா, ஜப்பானிலும் போராட்டங்கள் நடந்தன.

காஷ்மீர் போராட்டததில் வன்முறை:

இதற்கிடையே ஈராக் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற கண்டன ஊர்லவத்தில் வன்முறைவெடித்தது.

லாக்செளக் பகுதியில் ஊர்வலததில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனங்களைத் தாக்கினர். கடைகள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

சென்னையில்..

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாமல்போராட்டம் நடத்தியதாகக் கூறி அந்த மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே பெரம்பூரில் ஈராக் போரை எதிர்த்து அமைதி ஊர்வலம் நடந்தது.

பெங்களூரில் கலாட்டா:

போருக்கு எதிராக பெங்களூரில் சுமார் 2,000 பேர் இன்று மார்க்கெட் பகுதியில் போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக சென்றவர்கள்திடீரென பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் 15 பஸ்கள் சேதமடைந்தன. இவர்களைக் தடுக்க முயன்ற போலீசார் மீதும்தாக்குதல் நடந்தது.

இதில் ஒரு இன்ஸ்பெக்டரும் சில போலீசாரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிகூட்டத்தைக் கலைத்தனர்.

கொல்கத்தாவில்..

கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. மேலும் இங்குள்ள பலமசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தபோது ஈராக்கில் அமைதி திரும்பவும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.

வெள்ளிக்கிழமை பயம்:

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் உலகம் முழுவதும் சிறப்புத் தொழுகைக்காக இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடுவர். அப்போதுஅமெரிக்காவுக்கு எதிரான பெரிய அளவிலான போராட்டங்கள் நடக்கும் என்பதால் அனைத்து நாடுகளிலும் மசூதிகள் அருகேகண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வன்முறை ஏதும் வெடித்துவிடாமல் தடுக்க மசூதிகளைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கோபி அன்னான் கோரிக்கை:

போரினால் ஈராக்கில் மிகப் பெரும் அளவில் பட்டினிச் சாவுகள் நடக்கும் என ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.

இதைத் தவிர்க்க ஈராக்குக்கு உணவு சப்ளை வழங்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்குமாறு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நாடுகளுக்குகோரிக்கை விடுத்துள்ளார்.

1991ம் ஆண்டு முதல் உணவுக்கு மட்டுமே ஈராக் எண்ணெய்யை விற்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் ஈராக் பெரும்பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. ஈராக்கின் எண்ணெய்யை ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு வாங்கிக் கொண்டு உணவை வழங்கிவந்தது.

இப்போது ஈராக்கில் இருந்து ஐ.நா. குழுவினர் அனைவரும் வெளியேறுவிட்டதால் அந் நாட்டுக்கு உணவு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதைத் தடுக்க ஈராக் எண்ணெய்யை வாங்கிக் கொண்டு உணவு சப்ளையைத் தொடரும் பணியை தானே முன்னின்று நடத்த கோபிஅன்னான் முன் வந்துள்ளார். இதற்கு அனைத்து நாடுகளின் அனுமதியையும் கோரி அவர் கடிதம் எழுதியுள்ளார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X