அமெரிக்க குண்டு வீச்சில் 50 பேர் பலி
தோஹா:
ஈராக்கிய நகரான பாஸ்ராவில் அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சில் ஒரு ரஷ்யர் உள்பட 50பேர் கொல்லப்பட்டனர்.
இன்று பகல் பாஸ்ரா நகரில் அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகளை மழையாகப்பொழிந்தன. இதில் ஒரு ரஷ்யரும் வேறு 49 பேரும் உடல் சிதறி இறந்தனர். இவர்களில் 2 வயதுகுழந்தையும் அடக்கம்.
மேலும் ஏராளமானவர்கள் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
அன்னான் மீது ஈராக் புகார்:
இதற்கிடையே ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அமெரிக்காவுக்கு ஆதரவாகசெயல்படுவதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நாவுக்கான ஈராக்கிய தூதர் முகம்மத் அல்தொவ்ரி நிருபர்களிடம் பேசுகையில், இதுவரைஅன்னான் போருக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. போர் ஆரம்பிக்கும்முன்பாகவே ஐ.நா. ஊழியர்களை திரும்ப அழைத்துவிட்டார்.
அதே போல ஈராக்கியர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்துக்கு தன்னையே தலைவாரப்போடும்படி அவர் கேட்பதும் அசிங்கமான செயல். ஈராக்கிய எண்ணெய்யை இவர் தனதுகட்டுப்பாட்டில் எடுத்து பின்னர் அமெரிக்கா- இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயல்கிறார்.
இவரது செயலால் ஐ.நாவின் எதிர்காலமே கேள்விக்குரியாகிவிட்டது என்றார்.
இதற்கிடையே ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை ஐ.நாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்தஎண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் ஈராக் மக்களுக்கு உணவு வழங்குவது குறித்து இன்றுஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவாதிக்க உள்ளது.
ஈராக் தூதரை வெளியேற்ற ரஷ்யா மறுப்பு:இன்று பகல் பாஸ்ரா நகரில் அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகளை மழையாகப்பொழிந்தன. இதில் ஒரு ரஷ்யரும் வேறு 49 பேரும் உடல் சிதறி இறந்தனர். இவர்களில் 2 வயதுகுழந்தையும் அடக்கம்.மேலும் ஏராளமானவர்கள் இதில் படுகாயமடைந்துள்ளனர்.அன்னான் மீது ஈராக் புகார்:இதற்கிடையே ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அமெரிக்காவுக்கு ஆதரவாகசெயல்படுவதாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.ஐ.நாவுக்கான ஈராக்கிய தூதர் முகம்மத் அல்தொவ்ரி நிருபர்களிடம் பேசுகையில், இதுவரைஅன்னான் போருக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. போர் ஆரம்பிக்கும்முன்பாகவே ஐ.நா. ஊழியர்களை திரும்ப அழைத்துவிட்டார்.அதே போல ஈராக்கியர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்துக்கு தன்னையே தலைவாரப்போடும்படி அவர் கேட்பதும் அசிங்கமான செயல். ஈராக்கிய எண்ணெய்யை இவர் தனதுகட்டுப்பாட்டில் எடுத்து பின்னர் அமெரிக்கா- இஸ்ரேலிடம் ஒப்படைக்க முயல்கிறார்.இவரது செயலால் ஐ.நாவின் எதிர்காலமே கேள்விக்குரியாகிவிட்டது என்றார்.இதற்கிடையே ஈராக்கிய எண்ணெய் கிணறுகளை ஐ.நாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்தஎண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயில் ஈராக் மக்களுக்கு உணவு வழங்குவது குறித்து இன்றுஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவாதிக்க உள்ளது.ஈராக் தூதரை வெளியேற்ற ரஷ்யா மறுப்பு:
ஈராக் தூதரை வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யாநிராகரித்துவிட்டது. இது போன்ற உத்தரவு அளிக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனரஷ்யா கூறியுள்ளது.
தீ வைக்கவில்லை: ஈராக் மறுப்பு
இதற்கிடையே எண்ணெய் கிணறுகளுக்கு நாங்கள் தீ வைக்கவில்லை என ஈராக் கூறியுள்ளது.அமெரிக்கப் படைகள் தான் இந்தச் செயலைச் செய்ததாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.
ஈராக் தூதரை வெளியேற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யாநிராகரித்துவிட்டது. இது போன்ற உத்தரவு அளிக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனரஷ்யா கூறியுள்ளது.
தீ வைக்கவில்லை: ஈராக் மறுப்பு
இதற்கிடையே எண்ணெய் கிணறுகளுக்கு நாங்கள் தீ வைக்கவில்லை என ஈராக் கூறியுள்ளது.அமெரிக்கப் படைகள் தான் இந்தச் செயலைச் செய்ததாக ஈராக் குற்றம் சாட்டியுள்ளது.


