For Daily Alerts
Just In
பிரிட்டிஷ் ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல்: 7 வீரர்கள் பலி
குவைத்:
ஈராக் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் படைகளின் இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டன. இதில் 7 பிரிட்டிஷ் வீரர்கள் பலியாயினர்.
இந்த மோதல் கத்தார்- சவுதியை ஒட்டிய கடல் பகுதியில் நடந்தது. பிரிட்டனின் கடற்படைக்குச் சொந்தமான அந்தஇரு சீ கிங் ஹெலிகாப்டர்களும் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச் சம்பவம் நடந்தது.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இது ஒரு விபத்து தான் என்றும், ஈராக் தாக்குதலில்ஹெலிகாப்டர்கள் விழவில்லை என்றும் பிரிட்டன் கூறியுள்ளது. இது குறித்து விசாரணைக்கும்உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பிரிட்டிஷ் படையினரும் 4 அமெரிக்க வீரர்களும்பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.


