இளங்கோவன்-சோ.பா. இடையே மோதல் தீவிரம்
சென்னை:
மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவதில் தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணனுக்கும்(சோ.பா.) செயல் தலைவர் இளங்கோவனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைந்தவுடன் அக்கட்சியைச் சேர்ந்த சோ.பா. காங்கிரஸ்தலைவராக நியமிக்கப்பட்டார். இளங்கோவனுக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
ஆனாலும் வழக்கமான கோஷ்டி மோதல் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.சோ.பாவுக்கும் இளங்கோவனுக்கும் இடையில் கூட ஆரம்பத்திலிருந்தே முறுகல் நிலை இருந்துவந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு அவர்கள் ஒன்றாகவே செயல்பட்டு,நிருபர்களுக்குப் பேட்டி அளித்து வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் விவகாரத்தில் இருவருக்கும் இடையே இருந்தபனிப் போர் நீருபூத்த நெருப்பாக வெடித்துக் கிளம்பியுள்ளது.
தென் சென்னை, தென் ஈரோடு, வட ஈரோடு, மேற்கு வேலூர் மாவட்டங்களின் காங்கிரஸ்தலைவர்களை நேற்று இரவோடு இரவாக பதவியிலிருந்து நீக்கம் செய்து விட்டார். இவர்கள்அனைவருமே இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர்கள் நீக்கப்பட்ட விஷயம் இளங்கோவனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அகிலஇந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசனுடன் மட்டும் பேசி முடிவெடுத்து வேறு நிர்வாகிகளைநியமித்து பட்டியலையும் வெளியிட்டு விட்டார் சோ.பா.
இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய சோ.பா., சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் கட்சித்தலைவராகிய தன் அனுமதி இல்லாமலேயே நியமிக்கப்பட்டிருந்ததாகவும், தன் அனுமதி இல்லாமல்வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் செல்லாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்த இளங்கோவனின் ஆதரவாளர்கள்அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் உடனடியாகச் சென்று இது தொடர்பாக முறையிட்டனர்.
இதையடுத்து இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சோ.பா. எடுத்த முடிவு மிகவும் தவறான செயல். முறையானதும் அல்ல. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு,முடிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை அவர் நிராகரிக்க முடியாது.
நீக்கப்பட்டதாகக் கூறப்படும் தென் சென்னை மாவட்ட செயலாளர் மங்களராஜ், வட ஈரோடுமாவட்ட செயலாளர் முத்துக்குமார், தென் ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் மேற்குவேலூர் மாவட்ட செயலாளர் பாளூர் சம்பத் ஆகியோர் அவர்கள் பதவிகளில் தொடர்ந்துநீடிப்பார்கள்.
மேலும் அந்தந்த மாவட்டத்தின் மற்ற நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பு மாவட்டசெயலாளர்களுக்கு உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்களை சோ.பா. என்னைக் கேட்டாநியமித்தார். அதுபோலத்தான் இதுவும்.
அதே நேரத்தில் சோ.பா. தற்போது வெளியிட்டுள்ள பட்டியலையும் ஏற்க முடியாது. மாவட்டநிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்போ, நீக்கும் பொறுப்போ சோ.பாவுக்குக் கிடையாது. அகிலஇந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டும்தான் அந்த உரிமை உள்ளது.
இந்நிலையில் சோ.பாவையும் என்னையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அழைத்துள்ளார். நாளை நான் அங்கு சென்று சோனியாவுடனும் மற்ற முக்கிய காங்கிரஸ்தலைவர்களுடனும் இது தொடர்பாக விவாதிக்க உள்ளேன்.
சோ.பாவுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவர்இவ்வாறு வேண்டும் என்றே செயல்படக் கூடியவரும் கிடையாது. அவரை யாரோ பின்னால்இருந்து தூண்டிவிட்டு, இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சனையால் கட்சியின் வளர்ச்சி எந்தவிதத்திலும் பாதிக்காது. கட்சியை வளர்ப்பதற்குநான் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கட்சியை வளர்க்கமுயற்சித்து வருகிறேன். கட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக செயல்படுவேன். சோ.பாவும்அப்படியே செயல்படுவார் என்றும் நம்புகிறேன் என்றார் இளங்கோவன்.
இளங்கோவன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது முந்தைய தமாகா பிரமுகர்களில்முக்கியமானவரான அழகிரி எம்.எல்.ஏவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.ஆனால் முக்கியப் பொறுப்பில் அதுவும் தமிழக காங்கிரஸின் முதல் பொறுப்பில் இருக்கும்இருவருக்கும் இடையே மோதல் வெடித்துக் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


