For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமாண்டர்களை கொன்றுவிட்டு சரணடைந்த 10,000 ஈராக்கிய வீரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

ஈராக்கின் பெரும் அளவிலான வீரர்கள் அமெரிக்காவிடம் சரணடைந்து வருகின்றனர்.

அமெரிக்கப் படையினரிடம் சரணடைய அனுமதி தர மறுத்த ஈராக்கிய ராணுவ கமாண்டர்களை அந் நாட்டுராணுவ வீரர்களே சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று அல் போ வளைகுடாவுக்குள் பிரிட்டிஷ்- அமெரிக்கக் கூட்டுப் படைகள் நுழைந்தபோது 10,000 ஈராக்வீரர்கள் சரணடைந்தனர். சரணடையும் முன் இவர்கள் தங்களது ராணுவ கமாண்டர்களை சுட்டுக் கொன்றதாகபிரிட்டனின் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.

அந்த நகரைக் கைப்பற்றிய பின் பிரிட்டிஷ் படைகள் சோதனை நடத்தியபோது பாதாள அறைகளுக்குள் ஈராக்கியராணுவ கமாண்டர்களின் உடல்கள் கிடந்ததாகவும் அவர்களை அந் நாட்டு வீரர்கள் சுட்டுக் கொன்றதாகத்தெரியவந்ததாகவும் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.

நேற்று மாலை உம் கஸ்ஸர் நகரின் ஒரு பகுதியை அமெரிக்க- பிரிட்டன் படைகள் கைப்பற்றின. ஆனால், ஈராக்வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் இரவு முழுவதும் சண்டை நீடித்தது. அமெரிக்கப் படைகளுக்குஆதரவாக விமானங்கள் ஈராக்கியப் படைகள் மீது குண்டு வீசியதைத் தொடர்ந்து ஈராக் வீரர்கள் பின்வாங்கிஓடினர்.

அவர்களில் சுமார் 300 பேர் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தனர். சரணடைய மறுத்த 600 ஈராக்கியவீரர்களை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ளன.

அதே போல யூப்ரிடஸ் நதி அருகே இருந்த ஈராக்கின் 11வது ராணுவப் பிரிவும் தங்களிடம்சரணடைந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதில் 1,000 வீரர்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

சரணடைந்து வரும் ஈராக்கிய வீரர்கள் போதுமான சில நாட்களாக உணவு இல்லாமல் தவித்து வந்ததாகவும், உரியசீருடை கூட இல்லாமல் இருப்பதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. மேலும் மிகப் பழைய ஏ.கே.-47துப்பாக்கிகள் மட்டுமே அவர்களிடம் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

குழப்பத்தில் ஈராக் ராணுவ தலைமை:

இப்போது அமெரிக்கப் படைகள் ஈராக்குக்குள் சுமார் 150 கி.மீ. தூரம் ஊடுருவிவிட்டன. பாஸ்ரா நகரை அவைஇன்று அல்லது நாளை கைப்பற்றிவிடும் என்று தெரிகிறது. ஈராக்கின் பெட்ரோலிய உற்பத்தியில் 40 சதவீதம்பாஸ்ராவில் தான் உள்ளது.

உம் கஸ்ஸர் நகரின் பெட்ரோலிய கிணறுகளையும் நேற்று இரவில் அமெரிக்கா கைப்பற்றிவிட்டதுகுறிப்பிடத்தக்கது. மேலும் ஈராக்கின் ஒரே துறைமுகத்தையும் அங்கிருந்த இரு போர்க் கபபல்களையும் பிரிட்டன்படைகள் கைப்பற்றியுள்ளன.

பாக்தாதில் தான் ஈராக்கின் ராணுவத் தலைமையகம் உள்ளது. அங்கு நடந்து வரும் பயங்கர குண்டுவீச்சுகாரணமாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள படையினருடன் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ள இயலாமல்ராணுவத் தலைமையகம் திணறி வருகிறது.

மேலும் படையினருக்கான சப்ளைகளையும் விமானத் தாக்குதல்கள் சிதறடித்துள்ளதால் ஈராக்கிய வீரர்களின்போரிடும் திறன் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் ஈராக்கிய வீரர்கள் டாங்கிகளையும்,கவச வாகனங்களையும் பாலைவனத்திலேயே விட்டுவிட்டு ஓடி வருகின்றனர். அதே நேரம் அவர்கள் அமெரிக்கப்படைகளிடம் சரணடையவும் இல்லை.

இரண்டாவது அமெரிக்க வீரர் பலி:

நாட்டுக்குள் ஊடுருவி வரும் அமெரிக்கப் படைகளை ஆங்காங்கே சிறிய குழுக்களாகப் பிரிந்துள்ள ஈராக்கியப்படைகள் தாக்கி வருகின்றன. இதில் நேற்று இரு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பகலில் ஒருவரும் நேற்றிரவுநடந்த தாக்குதலில் இன்னொருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் விமான தளங்கள் பிடிபட்டன:

இதற்கிடையே மேற்கு ஈராக்கின் 2 முக்கிய விமான தளங்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளன.இதன்மூலம் ஈராக்குக்குள்ளேயே அமெரிக்க விமானங்கள் தரையிறங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் அதிபர் சதாம் ஹூசேனின் ஆட்சி இப்போது கடைசி நாட்களில் இருப்பதாக அமெரிக்கபாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.

ஈராக் மறுப்பு:

ஆனால், இதை ஈராக் மறுத்துள்ளது. தெற்கு ஈராக்கின் அல் போ வளைகுடாவிலும் உம் கஸ்ஸர் நகரிலும்ஈராக்கியப் படைகள் அமெரிக்கர்களிடம் சரணடையைவே இல்லை என ஈராக் கூறியுளளது.

பிரிட்டிஷ் மூத்த அதிகாரி ராஜினாமா:

ஈராக் மீது இத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை சட்ட ஆலோசகர் எலிசபெத்இல்ம்ஹர்ஸ்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரிட்டனில் 2 அமைச்சர்கள், ஒரு எம்.பி ஆகியோர் முன்னதாகராஜினாமா செய்தனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X