For Daily Alerts
Just In
குவைத்தில் இருந்து 422 இந்தியர்கள் நாடு திரும்பினர்
மும்பை:
குவைத்தில் இருந்து இன்று 422 இந்தியர்கள் இன்று மும்பை வந்து சேர்ந்தனர்.
போர் தொடங்கியதில் இருந்து குவைத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிருக்கு அஞ்சி இந்தியாதிரும்பியவண்ணம் உள்ளனர்.
இன்று ஏர்-இந்தியாவின் போயிங் சிறப்பு விமானத்தில் 422 பயணிகள் மும்பை வந்திறங்கினர். முன்னதாக 200இருக்கைகள் கொண்ட ஏர் பஸ் விமானத்தை ஏர் இந்தியா இயக்க இருந்தது. ஆனால், இந்தியா திரும்ப விரும்பும்இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 410 சீட்கள் கொண்ட போயிங் விமானம் இயக்கப்பட்டது.
இதில் 13 குழந்தைகள் உள்பட 422 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். மேலும் நேற்று வந்திறங்கிய பயணிகளின்பெட்டிகளும் இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்டன.
இது தவிர இன்னொரு ஏர் இந்தியா போயிங் விமானம் இன்று இரவு குவைத் செல்கிறது.


