For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க படைகளை நோக்கி ஈராக்கிய படைகள் முன்னேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

உயிர்ச் சேதங்கள், சிறைபிடிப்புகளுக்கு மத்தியிலும் பாக்தாதை நோக்கி அமெரிக்க- பிரிட்டிஷ்படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளன. இந்தப் படைகளை எதிர்கொள்ள பாக்தாத் நகரில்இருந்து நூற்றுக்கணக்கான ஈராக்கிய டாங்கிகளும் கவச வாகனஙகளும் தெற்கு நோக்கி முன்னேறஆரம்பித்துள்ளன.

முன்னதாக பாக்தாத் நோக்கி முன்னேறிய அமெரிக்கப் படைகளால் நசிரியா நகருக்குள் நுழையமுடியவில்லை. அந்த அளவுக்கு அங்கு ஈராக்கிய பதில் தாக்குதல் இருந்தது.

இதனால் அந்த நகரைத் தவிர்த்துவிட்டு யூப்ரிடிஸ் நதியைக் கடந்து பாக்தாதை நோக்கி இந்தப்படைகள் முன்னேறின. ஈராக்கின் தென் பகுதியில் இருந்து அமெரிக்கப் படைகளும், பிரிட்டிஷ்படைகளும் முன்னேறி வருகின்றன. அதே போல மேற்குப் பகுதியில் இருந்து ஒரு பிரிவுஅமெரிக்கப் படைகள் முன்னேறி வருகின்றன.

இந்தப் படைகள் பாக்தாதில் இருந்து 80 கி.மீ. தொலைவை அடைந்துவிட்டன. பாலைவனப் புயல்காரணமாக தூசிப் படலம் பரவியுள்ளதால் படைகள் மிக மெதுவாகவே முன்னேறுகின்றன.

இந்தப் படைகளை எதிர்கொள்ள ஈராக்கிய டி-72 ரக டாங்கிகளும் தெற்கு நோக்கி முன்னேறஆரம்பித்துள்ளன. யூப்ரிடிஸ் நதியின் வடக்கே பாலைவனப் புயல் காரணமாக எழுந்துள்ள தூசிப்படலத்தைப் பயன்படுத்தி ஈராக்கியப் படைகள் சிறு குழுக்களாக வந்து அமெரிக்கப் படைகளைதாக்க ஆரம்பித்துள்ளன.

ஈராக்கிய வீரர்களுடன் சதாம் பிதாயீன் போன்ற போராளிக் குழுக்களும், வழக்கமான சதாமுக்குஎதிரான ஷியா போராளிக் குழுக்களும் கூட அமெரிக்கப் படைகளைத் தாக்கி வருகின்றன.வழக்கமாக சதாம் ஹூசேனை எதிர்க்கும் ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இனப் படைகளும்சதாமுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருப்பது அமெரிக்கப் படைகளை கடும்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே பாக்தாதில் உள்ள ஈராக்கியப் படைகளை நிலை குலையச் செய்ய அமெரிக்கவிமானங்கள் கடும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தங்களை நோக்கி வரும்ஈராக்கிய டாங்கிகளை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குகின்றன.

இந்த ஹெலிகாப்டர் தாக்குதலை சமாளிக்க டாங்கிகளுக்கு இடையே ஈராக்கிய விமான எதிர்ப்புபீரங்கிகளும் வந்தவண்ணம் உள்ளன. அவை ஹெலிகாப்டர்கள் தங்கள் டாங்கிகளை நோக்கி வரவிடாமல் சுட்டு வருகின்றன.

அதே போல கூட்டமாக தனது படைகளைக் குவிக்காமல் பல சிறு பிரிவுகளாக ஈராக்கிய படைகள்முன்னேறி வருகின்றன.

ஆனால், இன்று ஈராக்கியப் படைகளை விட பாலைவனப் புயல் தான் அமெரிக்கப் படைகளைஅதிகம் தாக்கி வருகிறது. தூசிப் புயல் காரணமாக இந்தப் படைகள் பல முறை நடுவழியில்நிறுத்தப்பட்டன.

பாவைவனப் பகுதியிலேயே மிகத் தீவிரமாக போரிட்டு வரும் ஈராக்கியப் படைகளை பாக்தாதின்நகர்ப்புறத்தில் கட்டடங்களுக்கு இடையே சந்திப்பது அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும்சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

நகர்ப் பகுதிகளில் போரிடும் தங்கள் மீது ஈராக்கிய படைகள் ரசாயன ஆயுதங்களைப்பயன்படுத்தலாம் என்ற அச்சமும் அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்களை கடும் அச்சத்தில்ஆழ்த்தியுள்ளது.

பாஸ்ரா, நசிரியா, உம் கஸ்ஸர் ஆகிய இடங்களில் ஈராக்கிய ராணுவத்தினருடன் போராளிக்குழுக்களும் சாதாரண உடைகளில் தாக்குதல் நடத்தி வருவதால் கடும் குழப்பத்தில் உள்ளனஅமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்.

குறிப்பாக நசிரியாவில் பதில் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்ததால் பல இடங்களில் பிரிட்டிஷ்படைகள் பின்வாங்கியுள்ளன. இந்த நகரில் தான் 10 அமெரிக்க வீரர்களை ஈராக் கொன்றது என்பதுகுறிப்பிடத்தக்கது.

இதனால் இங்கு ஈராக்கிய வீரர்களை தரைவழித் தாக்குதலில் எதிர்கொள்வதை முடிந்தவரைதவிர்க்கும் முயற்சிகளில் இந்தப் படைகள் ஈடுபட்டுள்ளன. நசிரியா நகருக்குள் இந்தப் படைகள்நுழையவில்லை. அதைத் தவிர்த்துவிட்டு பாக்தாதை நோக்கி முன்னேறுகின்றன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X