திருப்பதி கோவிலில் நேபாள மன்னர், ராணி
திருப்பதி:
நேபாள மன்னர் ஞானேந்திராவும், ராணி கோமல் ராஜலட்சுமியும் இன்று காலை திருப்பதி வெங்கடாஜலபதிகோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாகச் சுற்றுப் பயணம் செய்தனர் நேபாள மன்னர் தம்பதியர். காஞ்சி காமாட்சி,மதுரை மீனாட்சி மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் அவர்கள் வழிபாடு நடத்தினர்.
நேபாள மன்னர், ராணி வருகையையொட்டி இந்தக் கோவில்களில் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
இந்நிலையில் இன்று காலை திருப்பதியில் உள்ள திருமலைக்கு நேபாள மன்னரும் ராணியும் சென்றனர். அங்குள்ளசுவாமி வெங்கடாஜலபதி கோவிலில் அவர்களுக்கு வேத மந்திரங்கள் ஓத சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் உண்டியலில் காணிக்கைகளையும் அவர்கள் செலுத்தினர்.அவர்களுக்குப் புகழ்பெற்ற திருப்பதி லட்டும், பட்டுத் துணிகளும் பிரசாதமாக வழங்கப்பட்டன.
இதையடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு அவர்கள் கோவிலைச் சுற்றிப் பார்த்த நேபாள அரச தம்பதியர், பின்னர்சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.


