For Daily Alerts
Just In
புதுவை சட்டசபை கூடியது: நாளை பட்ஜெட் தாக்கல்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன்தொடங்கியது.
இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டசபை கூடியதும் பாண்டிச்சேரி துணை நிலைஆளுநர் மல்கானி உரை நிகழ்த்தினார்.
புதுவை மாநில நலன்கள் குறித்த திட்டங்களை அப்போது அவர் அறிவித்தார். ஆளுநர் உரைக்குப்பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
நாளை சட்டசபையில் 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநிலமுதல்வரும் நிதி அமைச்சருமான ரங்கசாமி பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
-->


