லண்டனில் ஐ-பிளெக்ஸ் சாப்ட்வேர் நிறுவன தலைவர் கைது
டெல்லி:
இந்திய சாப்ட்வேர் நிறுவனமான ஐ-பிளக்ஸ் சொல்யூஷன்ஸின் தலைவரான செந்தில் குமார்லண்டனில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் தாக்கப்படுவதும், சாப்ட்வேர் நிறுவனத்தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு போலாரிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் அருண் ஜெயினைஇந்தோனேஷியா போலீசார் கைது செய்தனர்.
இந்திய அரசின் பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் சுமார் ஐந்து நாட்களுக்குப் பின்னர்தான் அவர்விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே இம்மாதத் துவக்கத்தில் மலேசியாவில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களைமலேசியப் போலீசார் கைது செய்து கொடுமையாகச் சித்திரவதை செய்தனர்.
இதுபோன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும்வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லும் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்கள் கொந்தளிப்புஅடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐ-பிளெக்ஸ் சொல்யூஷன்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் லண்டன் கிளைத் தலைவரானசெந்தில் குமாரை பிரிட்டிஷ் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஐ-பிளெக்ஸ் நிறுவன ஊழியர்கள் விசா கட்டுப்பாடுகளை மீறியதாகக் குற்றம் சாட்டிய ஹாலந்துஅரசாங்கம், இதைத் தொடர்ந்து செந்தில் குமாரைக் கைது செய்யுமாறு லண்டன் போலீசாரைக்கேட்டுக் கொண்டது. இதையடுத்து லண்டனில் செந்தில் குமார் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் மீண்டும் சாப்ட்வேர் நிபுணர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசும், இந்திய சாப்ட்வேர்நிறுவனங்களின் கூட்டமைப்பான "நாஸ்காமு"ம் மேற்கொண்டுள்ளன.


