திருச்சி சிறையிலிருந்து கொளத்தூர் மணி விடுதலை
திருச்சி:
கர்நாடக அரசு தொடர்ந்திருந்த அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கொளத்தூர்மணி திருச்சி மத்திய சிறையிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்குத்திரும்பினார்.
வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் மீண்ட பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம்கொளத்தூர் மணியை கர்நாடக அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கொள்ளேகால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது 2 வழக்குகள் போடப்பட்டன. பின்னர்அவர் மீதான வழக்குகள் அதிகரித்தன. கடைசியில் அவர் மீது மொத்தம் 6 வழக்குகள்போடப்பட்டன. வீரப்பனுக்கு ஆயுதம் தந்தது, வெடி மருந்துகள் கொடுத்து தொடர்பாக இந்தவழக்குகள் போடப்பட்டிருந்தன.
இந்நிலையில் முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டபோது அவரை விடுவிப்பதுதொடர்பாக கொளத்தூர் மணியை தூதராக அனுப்புமாறு வீரப்பன் கோரியிருந்தான். ஆனால் கடைசிவரை மணி அனுப்பப்படவில்லை.
இறுதியில் வேறு வழியின்றி அவரை அனுப்புவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு எடுத்தபோதுநாகப்பா திடீரென்று படுகொலை செய்யப்பட்டார். அவரை யார் கொன்றார்கள் என்பது இன்னும்தெரியவில்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கோருவதில்லை என்று கர்நாடக அரசுமுடிவு செய்தது.
இந்நிலையில் கொளத்தூர் மணிக்கு மைசூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றுவழக்குகளில் ஜாமீன் கொடுத்தது. கடந்த 19ம் தேதி ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தது.
இன்னொரு வழக்கு திருச்சியில் இருந்தது. அந்த வழக்கில் ஏற்கனவே அவருக்கு ஜாமீன்கொடுக்கப்பட்டு விட்டது. ஒரு வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து ஆறு வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததால் திருச்சி சிறையிலிருந்துஇன்று அவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது சொந்த ஊருக்குக் கிளம்பினார் மணி.
கடந்த ஒரு ஆண்டாக மைசூர், பெல்லாரி மற்றும் திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தகொளத்தூர் மணி இன்றுதான் வெளியில் வந்துள்ளார்.


