மதுரை பல்கலை. தேர்வு கட்டண உயர்வு ஒத்திவைப்பு
மதுரை:
தேர்வுக் கட்டண உயர்வை மதுரை பலகலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.
தேர்வுக் கட்டணங்களை உடனே 15 சதவீதம் உயர்த்துமாறு மதுரை பல்கலைக்கழகத்துக்கு மாநில உயர்கல்வித்துறையிடம் இருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து விவாதிக்க பல்கலைக்கழகசெனட் கூடியது.
அதில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக் கூட்டத்தில் பல்கலைக்கழகத்துணைவேந்தர் பொன்னுசாமி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திடீரென கட்டணத்தை 15 சதவீதம்அதிகரிப்பதற்குப் பதிலாக ஆண்டுதோறும் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்தலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
மேலும் தனது நிர்வாகத்தின் சிக்கன நடவடிக்கைகளால் கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 8 கோடியை பல்கலைக்கழகம்மிச்சப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
மேலும் செனட் கூட்டத்தில் 2002-2003ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பட்ஜெட்டையும் துணை வேந்தர் தாக்கல்செய்தார்.
இக் கூட்டத்தில் கட்டண உயர்வை அமலாக்கக் கூடாது என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதையடுத்து கட்டண உயர்வை ஒத்தி வைப்பதாக துணை வேந்தர் அறிவித்துள்ளார்.


