For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ, நெடுமாறன் சிறையில் உண்ணாவிரதம்- பா.ஜ.க. எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரை விடுவிக்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சியினரும்உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல சிறையில் வைகோ, நெடுமாறன், திருநெல்வேலியில் வைகோவின் தாயாரும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான திமுக, மதிமுக, பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகளின்தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க.ஆகியவை இடம் பெறவில்லை.

புறக்கணிப்பு ஏன்?:

பொடா சட்டத்தை திமுகவும் மதிமுகவும் ஆதரித்ததே தவறு என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஇப்போது பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே திமுக போராட்டம் நடத்துவது எப்படி நியாயமாகும்என்று கூறியுள்ளது. முதலில் பா.ஜ.க. கூட்டணியை விட்டு திமுக வெளியே வர வேண்டும் என்று கோரியுள்ளது.

பொடாவை எதிர்த்தாலும் புலிகளை ஆதரிக்கும் வைகோ, நெடுமாறனுக்காக இந்தப் போராட்டத்தில் பங்கேற்ககாங்கிரஸ் முன் வரவில்லை. பொடாவுக்கு எதிராக தாங்கள் போராட்டம் நடத்தியபோதெல்லாம் திமுககண்டுகொள்ளவில்லை. இதனால் நாங்களும் இந்தப் போராட்டத்தை புறக்கணிக்கிறோம் என விடுதலைச்சிறுத்தைகள் கூறிவிட்டது.

வள்ளுவர் கோட்டத்தில்..

ஆனால், இந்தக் கட்சிகள் தவிர பிற கட்சிகள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கருணாநிதி ஆரம்பித்து வைத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மதிமுக மத்திய அமைச்சர் கண்ணப்பன், புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மதுரையில்...

மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மாவட்டத் தலைநகர்களில் அந்ததந்தப் பகுதி திமுக, மதிமுக தலைவர்கள், முன்னாள்அமைச்சர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், கடலூரில்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திருவண்ணாமலையில் கு.பிச்சாண்டி, திருவள்ளூரில் சுந்தரம், தூத்துக்குடியில்பெரியசாமி ஆகிய மாவட்ட திமுக மூத்த தலைவர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடக்கின்றன.

மதுரையில் இந்தப் போராட்டத்தை கருணாநிதியின் மகன் அழகிரி துவக்கி வைத்தார். ஆனாலும் ஸ்டாலின்ஆதரவாளர்களான மேயர் செ.ராமச்சந்திரன் உள்பட திமுகவின் அனைத்துக் கோஷ்டிகளும் இதில் பெரும்எண்ணிக்கையில் பங்கேற்றன.

வேலூரில் அன்பழகன் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் மதிமுக அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரன்ஆகியோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிமுக அவைத் தலைவர் கணேசன் தலைமைவகிக்கிறார். சிவகங்கையில் முன்னாள் திமுக அமைச்சர் த.கிருட்டிணன் தொடங்கி வைத்த போராட்டத்தில்எம்.ஜி.ஆர். கழத்தினரும் கலந்து கொண்டனர்.

கோவையில்..

கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்த போராட்டத்தில்பா.ஜகவினரும் கூட கலந்து கொண்டனர்.

இவற்றில் அந்தந்த மாவட்ட மதிமுக செயலாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பிற கட்சித்தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.

வைகோ, நெடுமாறனும் உண்ணாவிரதம்:

அதே போல வேலூர் சிறையில் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரும் கடலூர் சிறையில் நெடுமாறனும் மேலும்மற்ற சிறைகளில் உள்ள தமிழர் தேசிய இயக்கத்தினரும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வைகோவின் தாயார்:

திருநெல்வேலியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வைகோவின் 90 வயது தாயார் மாரியம்மாளும் கலந்துகொண்டார்.

சென்னையில் கருணாநிதி தொடங்கி வைத்த உண்ணவிரதப் போராட்டத்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்மாலையில் முடித்து வைக்கிறார்.

வைகோ- அன்பழகன் சந்திப்பு:

இதற்கிடையே இன்று வேலூர் சிறையில் வைகோவை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.க. எதிர்ப்பு:

இந் நிலையில் பொடா சட்டத்தை திமுகவும் மதிமுகவும் எதிர்ப்பது நியாயமற்ற செயல் என பா.ஜ.க. கூறியுள்ளது.

அக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், வைகோ கைது செய்யப்பட்டதை பா.ஜ.க.ஏற்கவில்லை. ஆனால், இந்தச் சட்டத்தை முதலில் ஆதரித்துவிட்டு இப்போது எதிர்ப்பது சரியல்ல என்றார்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X