For Daily Alerts
Just In
"இந்தியை பகைக்க வேண்டாம்": மத்திய அமைச்சர்
நாகர்கோவில்:
இந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்றுமத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதில்லை. நான் அப்படிக் கூறவும் இல்லை.
ஆனால் ஜெர்மன், பிரெஞ்ச் என்று பிற நாட்டு மொழிகளை விருப்பப் பாடமாகப் படிக்கும் பழக்கம்இந்தியாவில் உள்ளது. அது போலவே இந்தியையும் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தால் அதன்மூலம் தமிழகத்தையும் கடந்து வேலை வாய்ப்புகளுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்று கூறவிரும்புகிறேன்.
தமிழை தேசிய அளவில் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. எனது கருத்தும் அதுதான். அதற்காக இந்தியை பகைமை நோக்கத்தோடு பார்க்க வேண்டும்என்று அவசியமில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.


