For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை: பிரிட்டிஷ் தூதரகத்தில் விசா மோசடி
கொழும்பு:
பிரிட்டிஷ் செல்பவர்களுக்கு விசா வழங்குவதில் மோசடி செய்தது தொடர்பாக இலங்கைக்கானபிரிட்டிஷ் தூதரகத்தில் பணி புரியும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விசா வழங்குவதற்காக இதுவரை சுமார் 5,000 டாலர்கள் வரை அந்த அதிகாரி பெற்றுள்ளதாகக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பாக விசாரிப்பதற்காக லண்டனிலிருந்து ஒரு தனி போலீஸ் படைகொழும்புவுக்கு விரைந்துள்ளது.
ஆனாலும் அதற்கு முன்பாகவே அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்.
இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து பிரிட்டிஷ் செல்பவர்களுக்கான விசாவழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரிட்டிஷ் சென்று படிக்க விரும்பும் இலங்கை மாணவ, மாணவிகள் விசாகிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.


