சதாம் அரண்மனை மீது அமெரிக்க ஏவுகணைகள் சராமாரி தாக்குதல்
பாக்தாத்:
ஈராக் அதிபர் சதாம் ஹூசேனைப் பாதுகாத்து வரும் இடங்களைக் கண்டறிந்து அமெரிக்கவிமானங்கள் ஏவுகணைகளை வீசி வருகின்றன.
பாக்தாத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள இந்த இடங்களை அமெரிக்க போர்விமானங்கள் குறி வைத்துத் தாக்கி வருகின்றன.
இதில் ஏராளமான ஈராக் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் எத்தனை பேர்உயிரிழந்தனர் என்பது குறித்துத் தெரியவில்லை.
நேற்று இரவிலிருந்தே இந்தத் தாக்குதல் நடந்து கொண்டுள்ளன. ஈராக்கின் புலனாய்வுஅலுவலகமும் இந்தத் தாக்குதல்களில் கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தெற்கு பாக்தாத்தில் டைக்ரிஸ் நதியின் கரையில் இந்தப் புலனாய்வு அலுவலகம் அமைந்துள்ளது.
மேலும் சதாம் இன்டர்நேஷனல் ஏர்பீல்ட் என்ற பிரம்மாண்டமான அரண்மனையும் ஏவுகணைத்தாக்குதல்களில் கடும் சேதமடைந்துள்ளது. இங்கிருந்துதான் தன்னுடைய படைகளை ஈராக் ராணுவம்இயக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.


