தர்மபுரி அருகே ரயில் என்ஜின் மோதி 4 யானைகள் பரிதாப சாவு
தர்மபுரி:
தர்மபுரி அருகே ரயில் தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த யானைக் கூட்டத்தின் மீது ரயில்என்ஜின் மோதியதில் ஒரு குட்டி யானை உள்பட 4 யானைகள் உடல் நசுங்கி உயிரிழந்தன.
சேலத்திலிருந்து இன்று அதிகாலை தர்மபுரி நோக்கி வேறொரு ரயில் என்ஜினை இழுத்துக் கொண்டுஒரு ரயில் என்ஜின் சென்று கொண்டிருந்தது.
தர்மபுரி மாவட்டம் காட்டேரி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை 12 யானைகள் கடந்துகொண்டிருந்தன.
ஆனால் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் என்ஜின் டிரைவர் இதைக் கவனித்து என்ஜினைநிறுத்துவதற்குள் அந்த யானைக் கூட்டத்தின் மீது இரு என்ஜின்களும் பாய்ந்தன.
இதில் ஒரு குட்டி யானை உள்ளிட்ட நான்கு யானைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தன. அதில் ஒரு யானை சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு தண்டவாளத்திலேயே இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் இரண்டு யானைகள் படுகாயம் அடைந்தன. மோதிய வேகத்தில் இரண்டுரயில் என்ஜின்களும் தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. ஆனாலும் என்ஜின்டிரைவரும் அதிலிருந்த வேறு சிலரும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் பிழைத்தனர்.
நான்கு சக யானைகள் இறந்ததும், மற்ற ஆறு யானைகளும் சேர்ந்து கொண்டு அந்த ரயில் என்ஜினைசுற்றிச் சுற்றி வந்து கால்களாலும் துதிக்கையாலும் தாக்க ஆரம்பித்தன. சிறிது நேரம் கழித்து அவைகாட்டுக்குள் சென்று விட்டன.
டிரைவரும் மற்றவர்களும் என்ஜினுக்குள்ளே மறைவான இடத்தில் மறைந்து கொண்டதால்யானைகளின் தாக்குதலில் இருந்து தப்பினர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து,தண்டவாளத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே காயமடைந்த யானைகளுக்கு வனத் துறை அதிகாரிகளும் கால்நடைமருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


