உண்மையை சொன்ன அமெரிக்க நிருபர் பதவி நீக்கம்
நியூயார்க்:
உண்மையைச் சொன்னதால் வேலை நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்காவின் என்.பி.சி. தொலைக்காட்சியின்நிருபரை இங்கிலாந்து பத்திரிக்கையான டெய்லி மிரர் தனது நிறுவனததில் சேர்த்துக் கொண்டுள்ளது.
வியட்நாம் போர், முதல் வளைகுடா போர் போன்ற போர்களை நேரடியாகப் பார்த்து செய்திகள் வழங்கியவர்பீட்டர் ஆர்னெட். போர் செய்திகளை வழங்குவதில் மிகவும் தேர்ந்தவர். முதல் வளைகுடா போரின்போதுசி.என்.என். டிவிக்கு நேரடியாக போர் செய்திகளை வழங்கினார்.
இதற்காக சிறந்த பத்திரிக்கையாளருக்கான உலகப் புகழ்பெற்ற புலிட்செர் விருது வென்றார்.
இவர் என்.பி.சி. தொலைக் காட்சியில் பணியாற்றி வந்தார். ஈராக் போர் செய்திகளை சேகரிக்க இவரை இந்த டிவிஅந் நாட்டுக்கு அனுப்பியது. அங்கிருந்த வண்ணம் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் குறித்து செய்திகள் வழங்கிவந்தார்.
இந் நிலையில் அவரை ஈராக் அரசு டிவி பேட்டி கண்டது. அப்போது இந்தப் போரில் அமெரிக்கா தோல்வி கண்டுவருவதாக அவர் கூறினார்.
பல இடங்களில் அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதையும், ஈராக்கிய வீரர்கள் நினைத்ததை விட அதிகதீவிரத்துடன் போரிடுவதையும் குறிப்பிட்டார். அமெரிக்கா நினைத்தபடி போர் நடக்கவில்லை என்றும்,அமெரிக்க ராணுவத்தின் திட்டங்களை ஈராக்கிய வீரர்கள் தவிடுபொடியாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து அவரை என்.பி.சி. டிவி பதவி நீக்கம் செய்தது. மேலும் நேசனல் ஜியோகிராபிக் டிவியும் அவரதுசேவைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அவரை பிரிட்டனின் டெய்லி மிரர் பத்திரிக்கை தனது நிறுவனத்தில் சேர்த்துக் கொண்டுள்ளது.
தொடர்ந்து உண்மைகளை வெளியிடுவதற்கு உதவியாகவே அவரை தனது பத்திரிக்கையில் சேர்த்துக்கொண்டுள்ளதாக டெய்லி மிரர் கூறியுள்ளது. உண்மையைச் சொன்னதற்காக அவரை அமெரிக்கா பதவி நீக்கம்செய்துள்ளது என டெய்லி மிரர் இன்று தனது முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
சி.என்.என். டிவியில் இருந்தபோது லாவோஸ் நாட்டுப் படைகள் மீது அமெரிக்கப் படைகள் செரீன் என்றரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியதை வெளியிட்டார் பீட்டர். இதற்காக அவரை சி.என்.என். நீக்கியது.
இப்போது ஈராக் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சொன்னதற்காக என்.பி.சி. இவரை பதவிநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்க டிவிக்கள் பல உண்மைகளை மறைத்து வருவது குறிப்பிடக்கத்தது.


