For Daily Alerts
Just In
விமானம் தாங்கிக் கப்பலில் வழுக்கிய அமெரிக்க விமானம்
கத்தார்:
வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கப்பலில் இறங்கிய போர் விமானம் வழுக்கிச் சென்றுவிபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் பலத்த காயமடைந்தனர்.
வளைகுடாவில் நிறுத்தப்பட்டுள்ள யு.எஸ்.எஸ். கன்ஸ்டலேசன் என்ற போர்க் கப்பலில் இருந்து அமெரிக்க போர்விமானங்கள் பறந்து சென்று ஈராக் மீது தாக்குதல் நடத்திவிட்டு வருகின்றன.
இன்று காலை இது போலத் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பி வந்த ஒரு விமானம் கப்பலில் இறங்கியபோதுவழுக்கிச் சென்று பிற விமானங்கள் மீது மோதியது. இதில், தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிய விமானத்தின் இருவிமானிகள் காயமடைந்தனர்.
ஈராக்கிய ஏவுகணை மறிப்பு:
இன்று குவைத்தை நோக்கி வீசப்பட்ட ஈராக்கிய ஏவுகணையை பேட்ரியாட் ஏவுகணையைக கொண்டு குவைத்ராணுவம் தகர்த்தது. ஈராக்கின் தென் பகுதியிலேயே இந்த ஏவுகணை தடுக்கப்பட்டுவிட்டது.


