கோவை குண்டு வெடிப்பு வழக்கு: வேகம் கொடுத்த நீதிபதி திடீர் டிரான்ஸ்பர்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு உள்பட முக்கியமான வழக்குகளை விசாரித்துவரும் தனி நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் திடீரென்று தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாகஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் தனி நீதிமன்றத்திற்கு நீதிபதி சிவக்குமார் நியமிக்கப்பட்ட பின்னர்தான் குண்டுவெடிப்பு வழக்கு வேகம் பிடிக்கத் தொடங்கியது.
மேலும் நீதிபதி சிவக்குமார் வந்த பிறகுதான் இவ்வழக்கில் வாதாட அரசு வக்கீல்கள்நியமிக்கப்பட்டார்கள். கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் உள்ள 2,200 சாட்சிகளில் 338 பேர்விசாரிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கை வேகமாக விசாரிப்பதற்காக வக்கீல்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒத்துழைக்கவேண்டும் என்று ஆரம்பத்திலேயே கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார் சிவக்குமார். வழகக்குவிசாரணையின்போது பலமுறை தாமதம் செய்த அரசு அதிகாரிகளுக்கும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிபதி சிவக்குமார் தற்போது தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். இதனால் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை வேகம்பாதிக்கும் என்று வக்கீல்கள் கூறியுள்ளனர்.
நிர்வாகக் காரணங்களுக்காகவே நீதிபதி சிவக்குமார் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் அதற்குமேலும் பல காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


