For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்ய தூதரகம் அருகே அமெரிக்கா குண்டுவீச்சு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஈராக்கில் ஏற்பட்டு நிலைமை குறித்து வியட்நாமும் இந்தியாவும் இன்று ஆலோசனை நடத்தின.

இந்தியா வந்துள்ள வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் குயேன் டை நியேன் இன்று பிரதமர் வாஜ்பாயைச்சந்தித்தார். அப்போது இரு தரப்பினரும் அமெரிக்கத் தாக்குதல் குறித்தும் இதனால் தெற்காசியாவில் ஏற்பட்டுள்ளநிலைமை குறித்தும் விவாதித்தனர்.

உலக வரலாற்றில் போரில் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டிய ஒரே நாடு வியட்நாம் என்பது நினைவுகூறத்தக்கது.

ரஷ்ய தூதரகம் அருகே...

இந் நிலையில் இன்று பாக்தாத் நகரில் ரஷ்யத் தூதரகத்தின் அருகே அமெரிக்க குண்டு வீசியது. இதற்கு ரஷ்யாகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய உளவு செயற்கைக் கோள்:

இன்று ஒரு ராணுவ உளவு செயற்கைக் கோளை ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் ஈராக்கில்அமெரிக்கப் படைகளின் நடமாட்டத்தை ரஷ்யா உளவு பார்க்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த மாதம் இந்தியகடற்படையுடன் சேர்ந்து போர்ப் பயிற்சி நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கக் கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள இந்தியப் பெருங்கடலில் இந்தப் பயிற்சி நடக்கும்.

அரபு நாடுகளுக்கு கண்டனம்:

ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதற்கு அரபு நாடுகளிடையே ஒற்றுமை இல்லாதது தான் காரணம்என அரபு நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் உமர் மூசா கூறியுள்ளார். இப்போதாவது அனைத்து அரபுநாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தப் போரைத் தடுக்க வேண்டும் என்றார்.

ஜனநாயகத்தை அமெரிக்கா டாங்குகள், பி-52 குண்டு வீச்சு விமானங்களில் ஏற்றிக் கொண்டு வந்து ஈராக்கில்இறக்கிவிட முடியாது என்றார் அவர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X