புனிதப் போர் தொடங்க சதாம் அழைப்பு
பாக்தாத்:
அமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போர் தொடுக்குமாறு தனது நாட்டு மக்களுக்கு ஈராக்கிய அதிபர் சதாம்ஹூசேன் அழைப்பு விடுத்தார்.
இன்று ஈராக்கிய டிவியில் சதாமின் உரை வாசிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டதாவது:
இப்போது நமது படைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் குறைவான படைகள் தான் அமெரிக்க- பிரிட்டிஷ்படைகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தி வருகின்றனர். தேவைப்படும்போது மற்ற படைகளும் களம் இறக்கப்படும்.தீவிரமாய் எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறோம்.
மக்களும் இந்தப் போரில் பங்கேற்று எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்றும் ஈராக்கிய டிவியில் சதாமின் உரை படிக்கப்பட்டது. முன்னதாக அவரே டிவியில் பேசுவார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தோன்றவில்லை. அவரது அறிக்கையை தகவல்துறை அமைச்சர் சைத் அல்சகாப் தான் வாசித்தார்.
சதாமின் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்தால் அவர் பதுங்கி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்பதால்அது ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் ஈராக்கிய வான்வெளியில் ஏராளமான உளவு விமானங்கள் பறந்ததால் பதிவு செய்யப்பட்ட கேசட்எங்கிருந்து ஈராக்கிய டிவி நிலையத்துக்கு வருகிறது என்பதை அமெரிக்கா கண்டுபிடித்துவிடும் என்பதால்அதையும் கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டு அமைச்சரைவிட்டு தனது அறிக்கையை சதாம் வாசிக்கச் செய்தார்என்று தெரிகிறது.
அதே நேரத்தில், சதாம் ஹூசேன் உயிருடன் இல்லை எனவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களை 3முறை ஒளிபரப்பிவிட்டதாலும் இனியும் புதிதாக ஒளிபரப்ப பழைய கேசட் ஏதும் இல்லாததால் அமைச்சர் மூலம்அவரது பெயரில் அறிக்கை வாசிக்கப்படாடதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் சகாப் வாசித்த சதாமின் அறிக்கை விவரம்:
நமது மதம், தன்மானம், சொத்துகள் மீது அமெரிக்கக் கூலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த புனிததேசத்தைக் காக்க மதப் போரில் ஈடுபடுங்கள். என் சகோதரர்களே, உயிர்களைத் தந்து நாட்டைக் காத்திடுங்கள்.
எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் எதிரியைத் தாக்குங்கள். சாத்தான்களை எதிர்க்க வேண்டியகடமை நமக்கு உண்டு. இறுதியில் வெற்றி நம்மையே சேரப் போகிறது என்று கூறியுள்ளார் சதாம்.


