For Daily Alerts
Just In
ரசாயன ஆயுதங்களை தயார் செய்யும் ஈராக்
பாக்தாத்:
அமெரிக்கப் படைகள் மீது ரசாயன ஆயுதங்களால் தாக்க ஈராக்கியப் படைகள் தயாராவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் சில படைகள் பாக்தாதின் மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளன. இந்தப் படைகள் மீது ரசாயனஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த ஈராக் முடிவு செய்துள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.
ஈராக்கிய வீரர்கள் ரசாயன பாதுகாப்பு உறைகள், உடைகளை அணிய ஆரம்பித்துவிட்டதாகவும் இதனால் ரசாயன ஆயுதத்தாக்குதல்கள் நடக்கலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது.
மேலும் தென் பாக்தாதில் ரசாயன ஆயுத சோதனைச் சாலை ஒன்றும் பிடிபட்டுள்ளதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. அங்குஏகப்பட்ட ரசாயன ஆயுதங்களுக்கான மூலப் பொருள்கள் குவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.


