For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூட்டை மூட்டையாய் சம்பளம்: சுமக்க முடியாமல் சுமந்து சென்ற அரசு ஊழியர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

முன்பெல்லாம் சில்லரைக் காசுப் பிரச்சனை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால், இப்போதெல்லாம் மக்களின் சட்டை, பேண்ட்பாக்கெட்டுகள் கிழிந்துவிடும் அளவுக்கு சில்லரைக் காசுகள் புழக்கம் மிக மிக அதிகரித்துள்ளது.

1 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் நோட்டுக்கள் மிக அதிகமாக புழங்கி அவை மிக வேகமாக கிழிந்து சேதமடைந்து வந்ததால், இவற்றுக்குப்பதிலாக அதிக அளவில் 1 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய், 50 பைசா நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

இதனால் இந்த ரூபாய் நோட்டுக்களையே பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் நாணயங்கள் தான் புழங்குகின்றன.

இந்த நாணயங்களை தேசியமயமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்கள் தலையிைல் திணிக்க ஆரம்பித்துள்ளது ரிசர்வ்வங்கி. வங்கியில் ரூ. 500 பணம் எடுக்கப் போனால், 400 ரூபாய்க்கு நோட்டுக்களையும் மீதி 100 ரூபாய்க்கு நாணயங்கள் அடங்கியமுடிப்பையும் தர ஆரம்பித்துள்ளன வங்கிகள்.

அதிலும் குறிப்பாக வங்கிகள் மூலம் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், பென்சன்தாரர்கள் தலையில் இந்த சில்லரை முடிப்புகளை வங்கிகள்வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றன.

இரு தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஊதியம் வாங்க ஸ்டேட் வங்கிக்குச்சென்றபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள்மூட்டைகளில் தரப்பட்டன.

அரசு ஊழியர்கள், போலீசார், ஆசிரியர்கள் என சம்பளம் வாங்க வங்கிக்குப் போனவர்கள் மூட்டைகளை சுமந்து கொண்டு வீடுகளுக்குத்திரும்பினர். பல ஊழியர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இதனால் வாக்குவாதமும் எழுந்தது.

ஆனால், எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு சில்லரை வந்துள்ளது. இதை நாங்கள் புழக்கத்தில் விட்டாக வேண்டும் என்று கூறிவிட்டவங்கி ஊழியர்கள் மூட்டைகளை அரசு ஊழியர்கள் தலையில் கட்டிவிட்டனர்.

ரூ. 10,000 ஊதியம் பெறும் அரசு ஊழியர் ஒருவருக்கு 5,000 ரூபாய்க்கு வெறும் சில்லரைக் காசுகளே தரப்பட்டன. பியூன்கள் போன்றகுறைந்த ஊதியதார்களுக்கு முழுச் சம்பளமும் மூட்டைகளில் சில்லரையாகத் தரப்பட்டது.

இதனால் பல ஊழியர்களும் சம்பளத்தை எடுத்துக் கொண்டு நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு ஆட்டோக்களில் ஏறி வீடுகளுக்குப்போய்ச் சேர்ந்தனர்.

ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் அரசு ஊழியர்களுக்கு இந்த முறை சுமக்க முடியாத அளவுக்குமூட்டைகளில் தான் ஊதியம் தரப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X