For Daily Alerts
Just In
சென்னை: 4 நாள் லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
சென்னையில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்பெறப்பட்டது.
இதுகுறித்து சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் சுகுமார்கூறுகையில்,
லாரி உரிமையாளர்களின் 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் இது தொடர்பாகமுதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தி சுமூக முடிவை அறிவிப்பதாகவும் போக்குவரத்துஅமைச்சர் விஸ்வநாதன் உறுதிமொழி கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.
இருப்பினும் மணல் லாரிகள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும். அவர்களதுகோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது.
சென்னை நகருக்குள் மணல் லாரிகளை பகல் நேரங்களில் அனுமதிக்க வேண்டும் என்பதேஅவர்களது முக்கிய கோரிக்கையாகும் என்றார் சுகுமார்.


