For Daily Alerts
Just In
வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையனை சென்னை செசன்ஸ் நீதிமன்றம்இன்று ஜாமீனில் விடுதலை செய்தது.
மதிப்புக் கூட்டு வரியை எதிர்த்து கடந்த மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில்கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது வெள்ளையன் உள்ளிட்ட சிலர் சென்னையில் உள்ள பல கடைகளைத் தாங்களே இழுத்துமூடியதாகப் புகார் கூறப்பட்டது.
இதையயடுத்து கடந்த 1ம் தேதி நள்ளிரவில் வெள்ளையன் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரைக்கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் செசன்ஸ் நீதிமன்றத்தில் வெள்ளையன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபாலன், வெள்ளையனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வெள்ளையன் விடுதலை செய்யப்பட்டார்.


