For Daily Alerts
Just In
பாஸ்ராவுக்குள் ஊடுருவிய பிரிட்டிஷ் படைகள்: 3 வீரர்கள் பலி
லண்டன்:
ஈராக்கின் தெற்கு நகரமான பாஸ்ராவுக்குள் பிரிட்டிஷ் படைகள் புகுந்தன. அந்நகரின்பெரும்பான்மையான பகுதிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக பாஸ்ரா நகரை சிறிது சிறிதாக முற்றுகையிட்டு வந்தனர் பிரிட்டிஷ்படையினர்.
தற்போது கிட்டத்தட்ட பாஸ்ரா நகர் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக பிரிட்டிஷ் படையினர்தெரிவித்துள்ளனர். பல தெருக்களில் அவர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இன்னும் பல இடங்களில் ஈராக் படையினருடன் அவர்கள் கடுமையாகச் சண்டையிட்டுவருகின்றனர். நேற்று இரவு முழுவதும் இந்தச் சண்டை நீடித்தது.
அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்ரா நகர் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும் என்றுபிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.


