தேவாரத்துக்கு புதிய பதவி: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சூடு
சென்னை:
சாதாரண அரசு அலுவலர்களை பணிக்குறைப்பு என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு அதிரடிப்படை தலைவராக இருந்த தேவாரத்தை நீக்கி விட்டுஅவருக்குப் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினரில் தலைவரானதேவாரம் சமீபத்தில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழக விளையாட்டு ஆணையத்தின்துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில்,
உடல் நிலை காரணமாக தேவாரத்துக்குப் பணிமாற்றம் தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படிஉடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டியதுதான் முறை.
தொடர்ந்து பணிகள் கொடுப்பதால் அவருடைய உடல் நிலை மேலும் பாதிப்படையும் என்பதுதான்உண்மை.
இவருக்கு மட்டுமல்ல. அண்மையில் ஓய்வு பெற்ற தமிழக டி.ஜி.பிக்கு (ராஜகோபாலன்) கூடசமீபத்தில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியில் இருக்கும் சாதாரண ஊழியர்களை எல்லாம் பணிக்குறைப்பு என்ற பெயரால்வீட்டுக்கு அனுப்பி வருகிறது இந்த அதிமுக அரசு. ஏனென்றால் இவர்கள் எல்லாம் சாதாரண அரசுஊழியர்கள்தான். ஆனால் அவர்கள் இருவரும் அதிகாரிகள் ஆயிற்றே?
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்பட்டு வந்தமுட்டையையும், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.10 ஆயிரத்தையும்சிக்கனம் கருதி இந்த அதிமுக அரசு நிறுத்தி விட்டது.
ஆனால் இப்போதோ ரூ.1000 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை சிக்கனமானபணியாக அவர்கள் கருதுகிறார்கள் போலும்.
இந்தத் தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்காக ராணி மேரி கல்லூரியை இடிப்பதில் தவறில்லைஎன்கிறது தமிழக பா.ஜ.க. தன் வழி தனி வழி என்று அது கூறுகிறதோ? அக்கல்லூரி முதல்வர்விடுப்பில் சென்றாரா? அல்லது கடுப்பில் சென்றாரா? புரியவில்லையே.
கடந்த இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட இறந்தவர்களின்கணக்கையும், ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்ட கணக்கையும்கூட்டிக் கழித்துப் பார்த்தால் போர் முடிந்தபோது உலகில் ஒருவர் கூட மிஞ்சியிருக்க மாட்டார்.
எனவே போர் முனையில் நிற்போர் ஏந்திச் செல்லும் ஆயுதங்களில் முக்கியமான ஆயுதமாகபொய்யும் கருதப்படுகிறது என்றார் கருணாநிதி.


