ராணி மேரி கல்லூரி விடுதி உணவகம் மூடல்: மாணவிகள் பட்டினி
சென்னை:
ராணி மேரி கல்லூரி விடுதியில் உள்ள உணவகம் மூடப்பட்டு விட்டதால் சாப்பாடு கூட இல்லாமல்மாணவிகள் பசியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள் ராணி மேரி கல்லூரி மாணவிகள்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி விடுதியில் உள்ள உணவகத்தை மூட அதன் புதிய முதல்வரானராஜலட்சுமி உத்தரவிட்டார். உணவகமும் உடனடியாக மூடப்பட்டு விட்டது.
மாணவிகள் மேல் இரக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக இந்த உணவகம்தான் அவர்களுக்குசாப்பாடு அளித்து வந்தது. ஆனால் அதுவும் தற்போது மூடப்பட்டு விட்டது.
![]() |
மாணவிகளிடம் மாட்டி அடி வாங்கும் மப்டி போலீஸ்

மப்டியில் வந்த போலீசை காப்பாற்றி அழைத்துச் செல்லும் போலீஸ்

சுவருக்கு வெளியே நின்று மகள்களுடன் பேசும் பெற்றோர்
கடும் பசி ஒரு பக்கம் வாட்டிக் கொண்டிருந்தாலும், கல்லூரியை இடிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் தீவிரமாகக் கூறி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
"இன்று காலையிலிருந்து இந்த மாணவிகள் வெறும் டீயை மட்டும் குடித்து விட்டு போராடிவருகிறார்கள்" என்று ராணி மேரி கல்லூரி ஆசிரியை ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
உணவு சமைத்துத் தர வந்த ஹாஸ்டலின் சயைமல்காரரை காக்கிச் சட்டைக் கும்பல் விரட்டி விட்டது.இதையடுத்து மாணவிகளே சமைத்து சாப்பிட்டனர். ஆனால், இன்று உணவகத்தையும் சமையல்அறையையும் மூடிவிட்டதால் சமைத்துச் சாப்பிட முடியாத நிலைக்கு மாணவிகள்தள்ளப்பட்டுள்ளனர்.
தங்களது குழந்தைகளின் பட்டினி அறிந்து நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் இன்று கல்லூரி வாசலில்கூடினர். ஆனால், அவர்களை உள்ளே விட காக்கிச் சட்டைகள் மறுத்துவிட்டன. இதையடுத்துசுவர்கள் அருகே நின்று தங்கள் மகள்களுடன் பெற்றோர் பேசினர்.
பட்டினியுடன் போராட்டம் நடத்தி வரும் தங்கள் குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் அழுதனர்.இதைப் பார்க்கவே உருக்கமாக இருந்தது. போராட்டத்தை விட்டுவிட்டு வீட்டுக்கு வருமாறு பலபெற்றோர் அழைத்தனர்.
ஆனால், பட்டினியால் சாவோமே தவிர போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என மாணவிகள்கூறிவிட்டனர்.
இதற்கிடையே அதிமுக மாணவர் அணி என்ற பெயரில் ஒரு கும்பல் போராட்டம் நடத்தும்மாணவிகளை மிரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது. நேற்று பெண் போலீசாரை சல்வார் கமீசில்உள்ளே அனுப்பி வேவு மாணவிகளை வேவு பார்த்தது போலீஸ். ஆனால், அந்த போலீசாரைமாணவிகள் அடித்து விரட்டினர்.
இதையடுத்து அதிமுக மாணவர் அணியின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கல்லூரியின் விடுதியையோ, உணவகத்தையோ மூடக் கூடாது என்று நேற்றிரவு உயர்நீதிமன்ற நீதிபதி அவசரஉத்தரவுப் பிறப்பித்தும் கூட இது நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் மதிக்கப்பட்டால் தான்ஆச்சரியப்பட வேண்டும் போலிருக்கிறது.


