தண்ணீர் இல்லாத வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை:
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்வைபவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. ஆனாலும் எப்போதும் இல்லாத வகையில்ஆற்றில் நீரே இல்லாத நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது பல பக்தர்களை வேதனை அடையச்செய்தது.
மீனாட்சித் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சிஅழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆகும்.
தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அவர் மதுரை வந்ததாகவும், வருவதற்குள்திருமணம் நடந்து முடிந்து விட்டதால் கோபித்துக் கொண்டு அவர் நகருக்குள் வராமல் வைகையில்இறங்கிவிட்டு பின்னர் அழகர் மலையைச் சென்று அடைந்ததாகவும் புராணம் கூறுகிறது.
அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் கோலம் பூண்டு மதுரை நோக்கிக் கிளம்பிய சுந்தரராஜப்பெருமாள் எனப்படும் அழகருக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குதிரை வாகனத்தில் நேற்று இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்த அழகரை தல்லாகுளத்தில் ஏராளமானபக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். "எதிர்சேவை" என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி நேற்றுஇரவு நடைபெற்றது.
அழகர் வரும் வழியெங்கும் "வர்ராரு... வர்ராரு... அழகரு வர்ராரு" என்ற கோஷம் விண்ணைப்பிளந்தது. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய "எதிர் சேவை" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவர்வைகையில் எழுந்தருளிய காட்சியை சுமார் 10 லட்சம் பக்தர்கள் கண்டு களித்தனர். அழகர் மீதுதண்ணீரைப் பீய்ச்சி அடித்து "கோவிந்தா... கோவிந்தா" என்ற கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.
ஆனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது அங்கு மிகச் சிறிதளவு நீரே இருந்தது. வறண்டுபோய்க் கிடந்த வைகை ஆற்றில் வெறும் பெயருக்கு மட்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிநடந்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதற்காகக் கடந்த பல நாட்களாக வைகை ஆற்றைத் தூர் வாறி, சுத்தப்படுத்தும் பணிகளும்மேற்கொள்ளப்பட்டன.
மேலும் கடந்த 11ம் தேதியே 400 கன அடி நீர் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்டது.ஆனால் இன்று காலை வரை அந்த நீரில் பெரும்பகுதி மதுரைக்கு வந்து சேரவில்லை. கடும் வறட்சிகாரணமாக வழியிலேயே பூமியில் நீர் உறிஞ்சப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆற்றில் நீர் இல்லாத நிலையில் அழகர் அதில் இறங்கினார். நீர் இல்லாததால் பக்தர்களும்மிகவும் சிரமப்பட்டுப் போயினர். திருவிழாவையொட்டி தங்கள் குழந்தைகளுக்கு மொட்டைபோட்ட பக்தர்கள் அவர்களைக் குளிப்பாட்டுவதற்குக் கூட நீர் இல்லாமல் அவதிப்பட்டனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பலர் குடம் குடமாக நீரை விற்கத் தொடங்கினர். சிறிய குட நீர் ரூ.5ஆகவும், பெரிய குட நீர் ரூ.10 ஆகவும் விற்கப்பட்டன. சில பக்தர்கள் மினரல் வாட்டர் பாட்டிலில்நீர் கொண்டு வந்து அதை வைத்து மொட்டை போடப்பட்ட தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டினர்.
இருப்பினும் பச்சைப் பட்டுடன் அழகர் ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு முழுவதும்வேளாண்மையும் மழையும் அமோகமாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இன்று மாலை வண்டியூர் சென்ற கள்ளழகர் அங்கு மண்டூகமானிக்கு சாப விமோசனம் கொடுத்தார்.பின்னர் தேனூர் சென்றார். அங்கிருந்து மீண்டும் மதுரை வரும் அழகர், ராமராயர் மண்டபத்தில்தசாவதாரம் எடுக்கிறார். இரவு முழுவதும் இந்நிகழ்ச்சி நடக்கும்.
பின்னர் அவர் 21ம் தேதி அழகர் கோவிலுக்குத் திரும்பிச் செல்வார். அதுவரை மதுரை சித்திரைத்திருவிழா சிறப்பாக நடந்தேறும்.
போலீஸ் பாதுகாப்பு தீவிரம்:
இதற்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி மதுரையில்ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
மதுரை மாநகர் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.இதற்காக வெளியூர்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.


