For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாரி ஸ்டிரைக்: முருங்கைக்காய் விலை ரூ.4, பெட்ரோலுக்கு கடும் பஞ்சம்- விழி பிதுங்கும் மக்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்துதமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி டீசல் விலைகள் உயர்த்தப்படுவதைக் கண்டித்தும், ஒவ்வொரு மாநிலத்திலும்லாரிகளுக்கென தனித்தனியாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் வேறு பலகோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

லாரிகள் இயங்காததாலும், போராட்டதை எதிர்கொள்ள அரசு முன்னெரிக்கையாகசெயல்படாததாலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் பெட்ரோல், டீசல் பஞ்சம்ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல பங்குகள் ஸ்டாக் இல்லை போர்டை தொங்கவிட்டுவிட்டன.திறந்திருந்த பெட்ரோல் பங்க்குகளில் இன்று காலை முதல் பல கி.மீ. நீளத்துக்கு வாகன வரிசைநின்றிருந்தது. கடும் வெயிலில் பெட்ரோலுக்காக மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெட்ரோல் கிடைக்காதவர்கள் என்னசெய்வது என்று தெரியாமல் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. "அளவு கொஞ்சம் குறைவாகஇருந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது எங்களுக்குப் பெட்ரோல் கொடுங்கள்" என்று பங்க்ஊழியர்களிடம் மக்கள் கெஞ்சும் காட்சிகளை பார்க்க முடிந்தது.

பல பெட்ரோல் பங்க் நிறுவனங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல்மட்டுமே வழங்கி வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நேற்றுநள்ளிரவுதான் குறைக்கப்பட்டன. ஆனால் அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியாமல் திணறிவருகின்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஏராளமாகப் பதுக்கி வைத்துக் கொண்டு வேண்டுமென்றேபெட்ரோல், டீசல் இல்லையென்று கூறுவதாகப் பொதுமக்களில் சிலர் குற்றம் சாட்டினர்.

சமையல் எரிவாயு:

லாரிகள் ஸ்டிரைக் காரணமாக விரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்படும் என்ற அச்சமும்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் கேட்டு பதிவுசெய்துள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக எரிவாயு விநியோகம்செய்யும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

விண்ணை நோக்கி காய்கறி விலை:

இதற்கிடையே காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை-கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு லாரி கூட வராததால் காய்கறிகளின் விலைகள்கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு முருங்கைக்காயின் விலை ரூ.4 ஆகியுள்ளது. கேரட் விலை ஜெட் வேகத்தில்உயர்ந்து தற்போது கிலோவுக்கு ரூ.20 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.30ஆக உள்ளது.

இதற்கிடையே சென்னைக்கு பஸ்கள் மூலமும், திருச்சியிலிருந்து சிறப்பு லாரிகள் மூலமும் போலீஸ்காவலுடன் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரளவுக்குஆங்காங்கே காய்கறி உற்பத்தி இருந்தாலும் கூட அங்கும் காய்கறிகள் விலை எக்கச்சமாக உயர்ந்துவருகிறது.

நாமக்கலில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 1.25 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. லாரிகள்இயங்காததால் கடந்த 3 நாட்களாக சுமார் 3.45 கோடி முட்டைகள் இங்கு தேங்கிக் கிடக்கின்றன.கடும் வெயில் காரணமாக அவை அழுகவும் ஆரம்பித்துவிட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 4 கோடிஆகும்.

வேலூர் பகுதியில் ஏராளமான வெல்லம் தேங்கிக் கிடப்பதால் வெல்ல வியாபாரிகள் மிகவும்கவலை அடைந்துள்ளனர்.

காய்கறிகள் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.

வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம்

இந்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு திமுக தலைவர் கருணாநிதிகடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களுக்கும் ஈடு செய்ய முடியாதஇழப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் போக்குவரத்தும் அடியோடுபாதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக 3 கோடி முட்டைகள்வீணாகி விட்டன.

விரைவில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துகொண்டுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலை மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே இந்தப் பிரச்சனையில் நீங்கள்உடனடியாகத் தலையிட்டு லாரி உரிமையாளர்களுக்கும் அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்படநடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தன் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக அரசுக்கு சூடு:

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. லாரிகள் வேலைநிறுத்தத்தால் வடஇந்தியாவைவிட தென்னிந்திய மக்கள்தான் அதிகமாக பாதிப்படைந்துள்ளனர்.

ஆனால் இதுபோன்ற தட்டுப்பாடுகளையும், விலை உயர்வுகளையும் முன்கூட்டியே யோசித்துதமிழக அரசு தடுத்திருக்கலாம். தடுத்திருக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்துதான் போராட்டம்நடக்கிறது என்றாலும் மாநில அரசுக்கும் இதில் பங்கு உண்டு. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டுதமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தின்போது லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது முன்கூட்டியேலாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதுபோன்ற சிரமங்கள் ஏற்படாத வகையில்தடுத்தோம்.

ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதுஎன்பதெல்லாம் குதிரைக் கொம்புதான் என்பதையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

வாஜ்பாய்க்கு ஜெயாவும் கடிதம்:

இதற்கிடையே லாரிகள் ஸ்டிரைக் விவகாரத்தில் வாஜ்பாய் தலையிட வேண்டும் என்று தமிழகமுதல்வர் ஜெயலலிதாவும் அவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,

காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் தமிழக மக்கள்மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உடனடியாகஇப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

ரூ.20,000 கோடி இழப்பு:

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இந்தியா முழுவதும் சுமார் 30 லட்சம் லாரிகள்கடந்த 3 நாட்களாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் சுமார் 3 லட்சம்லாரிகள் ஸ்டிரைக் காரணமாக ஓடவில்லை.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மத்திய அரசுக்கு ஒரு நாளுக்கு மட்டும் சுமார்ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுகிறது. மேலும் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.5,000கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

பேச்சுவார்த்தை தோல்வி:

இதற்கிடையே மத்திய அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே இன்று மாலைபேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு ஏதும் ஏற்படவில்லை. மீண்டும் பேச்சு நடத்தப்படும் என்றுதெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X