பதவியேற்க சென்ற பெரம்பலூர் பேரூராட்சி தலைவர் திடீர் மரணம்
பெரம்பலூர்:
கடந்த வாரம் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர்பேரூராட்சித் தலைவர் கண்ணன் பதவியேற்புக்குச் சில மணி நேரத்திற்கு முன் மாரடைப்பால்திடீரென மரணமடைந்தார்.
பெரம்பலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான இடைத் தேர்தல் கடந்த 7ம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பெரும் வெற்றி பெற்று பெரம்பலூர்பேரூராட்சித் தலைவரானார்.
இன்று காலை 10.30 மணிக்கு அவர் பேரூராட்சித் தலைவராகப் பதவியேற்க இருந்தார். இதற்காகத்தன் வீட்டில் கண்ணன் தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால்சிகிச்சை பலனின்றி அங்கு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
பேரூராட்சித் தலைவராகப் பதவியேற்க இருந்த கண்ணன் அதற்கு ஒரு சில மணி நேரத்திற்குமுன்பாகவே திடீரென இறந்தது பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.


