தமிழகத்தில் "356" தேவையில்லை: பா.ஜ.க.
சென்னை:
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை எதுவும் எழவில்லைஎன்று பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையைக் காரணம் காட்டி ஒரு அரசைக் கலைத்து விட முடியாது.அரசு நிர்வாகமே சீர்குலைந்து போய்விட்டால்தான் ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைஅமல்படுத்த முடியும்.
ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க. கருதவில்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. அந்தவகையில்தான் தமிழகத்தில் 356வது சட்டப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்த சட்டப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியே எதிர்த்துள்ளது. பா.ஜ.கவும் அதே நிலையைத்தான் கொண்டுள்ளது.
திமுகவும் ஆரம்பத்திலிருந்தே இந்த 356வது சட்டப் பிரிவுக்கு எதிராகவே கருத்து கொண்டுள்ளதுஎன்றார் வெங்கையா நாயுடு.


