சவுதி: 21 வகை வேலைகள் இனி உள் நாட்டினருக்கே!
துபாய்:
21 வகையான வேலை வாய்ப்புக்களில் தனது நாட்டினரை மட்டுமே ஊழியர்களாக நியமிக்க சவுதி அரேபியாமுடிவு செய்துள்ளது. இதனால் சுமார் 13 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பல வேலைகளில் வெளிநாட்டினரை நியமிக்க சவுதி அரேபியா தடை விதித்துவிட்டது. இதனால் அந்நாட்டில் இருந்து வந்த வேலை வாய்ப்பு குறைய ஆரம்பித்துவிட்ட நிலையில் இப்போது மேலும் 21 வகையானவேலைகளிலும் வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி இளவரசரும் துனை அதிபரும் பாதுகாப்புத்துறைத் தலைவரும்ன அப்துல்லா இது தொடர்பானவெளியிட்டுள்ள உத்தரவில்,
ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு, விளையாட்டு பொம்மைகள் செய்வது, நாற்காலிகள் தயாரிப்பு, எலெக்ட்ரிகல்மற்றும் வீட்டுத் தேவைப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், கார் ஷோ-ரூம்கள், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்,கட்டடப் பொருகள், மொபைல் போன்கள் விற்கும் கடைகள், புத்தகக் கடைகள், செருப்புக் கடைகள்,
ஸ்டேசனரி கடைகள், கார் டெகரேசன், பெயிண்ட் விற்பனை, டெயிலரிங் பொருள் விற்பனை, ஆட்டுக் கறிமார்க்கெட், கோழிக் கறி, கூடாரங்களை வாடகைக்கு விடும் கடைகள் ஆகியவற்றில் இனி சவுதி அரேபியர்களைமட்டுமே பணியில் நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் அல் அல்-நம்லா வெளியிட்டுள்ள உத்தரவில், மேற்கண்டவேலை வாய்ப்புகளில் அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக வெளிநாட்டினரை நீக்கிவிட்டு சவுதி அரேபியர்களைநியமிக்க வேண்டும்.
முதல் ஆண்டில் மேற்கண்ட விற்பனை நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு சவுதி அரேபியத்தொழிலாளியையாவது நியமித்தாக வேண்டும். இரண்டாவது ஆண்டில் 50 சதவீதத் தொழிலாளர்கள் உள்நாட்டினராக இருக்க வேண்டும். மூன்றாவது ஆண்டில் அனைத்துத் தொழிலாளர்களும் சவுதியைச்சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நினைவூட்டல் அறிக்கையில் அடுத்த 10நாட்களுக்குள் அனைத்து டாக்சி நிறுவனங்களிலும் 30 சதவீத டிரைவர்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களாகஇருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த உத்தரவு கடந்த ஆண்டே பிறப்பிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.


