நிலக்கோட்டையில் பரவும் மர்மக் காய்ச்சல்: வாலிபர் பலி- 300 பேர் பாதிப்பு
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக ஒருவர் பரிதாபமாக பலியானார்.மேலும் சுமார் 300 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்து உள்ள ராமராஜபுரத்தில் கடந்த மாதம் நல்ல மழைபெய்தது. அதற்கு மறுநாளிலிருந்தே அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தலைவலி,காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
மட்டப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து மக்கள்சேர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வாடிப்பட்டி கார்த்திக் என்ற 16 வயது வாலிபர் நேற்று காய்ச்சலுக்கு இறந்தார்.இதையடுத்து ராமராஜபுரம் கிராமத்தில் கடும் பீதி கிளம்பியுள்ளது.
இதையடுத்து அந்தக் கிராமத்தில் டாக்டர்களும் மருத்துவத் துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.திடீர்க் காய்ச்சல் தோன்ற என்ன காரணம் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
அங்குள்ள டீக்கடைகள், ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றை மூட அதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 300 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


