For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவை ஆதரித்தால் நீக்கப்படும் அமெரிக்க தூதர்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்க அரசு முழு மனதுடன்செயல்படாததால் தான் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் தனது பதவியை ராஜினாமாசெய்ததாகத் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணையாக வைத்துப் பார்க்கும் அமெரிக்க வெளியுறவுத்துறையின்தெற்காசிய விவகாரத் தலைவர் கிரிஸ்டினா ரோக்காவின் செயலைக் கண்டித்தும் அவர் பதவி விலகியுள்ளார்.

மேலும் ஈராக் மீதான தாக்குதலையும் அவர் எதிர்த்ததாகவும் இதனால் அவருக்கும் அதிபர் புஷ்சுக்கும் இடையேகருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா மீதான தீவிரவாதத் தாக்குதல்கள் நிற்காத வரை தெற்காசியாவில் முழு அமைதி ஏற்படாது, அதற்குபாகிஸ்தானை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலையில் பிளாக்வில் உள்ளார். ஆனால்,தன் நாட்டுக்கு எதிரான தீவிரவாதத்தை எதிர்த்தாலும் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை தீவிரமாகக் கண்டிக்கஅமெரிக்கா தயாராக இல்லை.

இந்த விஷயத்தில் கிரிஸ்டினா ரோக்காவுக்கும் பிளாக்வில்லுக்கும் இடையே மோதல் எழுந்ததாகக் கூறப்படுகிறது.பிளாக்வில்லுக்கு எதிராக சி.ஐ.ஏவின் தெற்காசிய கண்காணிப்புக் குழு ஒட்டுமொத்தமாக கூட்டு சேர்ந்துகொண்டதால் அதிபர் புஷ்ஷின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் கூட பிளாக்வில்லால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

ஆனால், இதை வெள்ளை மாளிகை வழக்கம் போல் மறுத்துள்ளது. பிளாக்வில்லுக்கும் அமெரிக்க அரசுக்கும்இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. கல்விப் பணியைத் தொடர விரும்பியும், தனது குடும்பத்தினரோடு அதிகநேரம் செலவிடவும் தான் அவர் தூதர் பதவியில் இருந்து விலகுகிறார் என ஜார்ஜ் புஷ்சின் செய்தித் தொடர்பாளர்ரிச்சர்ட் பெளஷ்ஷர் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவரிடம், இந்திய- பாகிஸ்தான் விவகாரத்தில் தீவிரவாத்தை ஒடுக்க அமெரிக்க அரசுமுழுமையாக செயல்படவில்லை என பிளாக்வில் கருதுவதாகக் கூறப்படுகிறதே. இதனால் தான் மனம் நொந்துஅவர் பதவியை ராஜினாமா செய்துள்ளாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால், அந்தக் கருத்தை ரிச்சர்ட் முழுமையாக மறுத்தார். பிளாக்வில் மிக மூத்த தூதர். அவரால் அமெரிக்காவுக்குபல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் கூட அவரது உதவி எங்கள் நிர்வாகத்துக்குத் தேவை.

அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இரு தினங்களுக்கு முன் பேசினார். அவரது சேவையைமனதாரப் பாராட்டினார்.

தனது தூதர் பதவியை விட்டு விலகும் ஆர்வத்தை நெடு நாளைக்கு முன்பே பிளாக்வில் தெரிவித்துவிட்டார்.அதிபர் புஷ்சிடம் நேரடியாகவே அவர் இதைத் தெரிவித்தார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர்பணியைத் தொடர விரும்புவதாகவும் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடவும் அவர்விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அவரது கோரிக்கையின் நியாயத்தை அதிபர் புஷ்சும் புரிந்து கொண்டுள்ளார். மற்றபடி அவர் பதவி விலக வேறுஎதுவுமே காரணமில்லை என்றார் ரிச்சர்ட். ஆனால், பிளாக்வில்லின் பதவி விலகலுக்கு ஈராக் மற்றும்பாகிஸ்தானுக்கு எதிரான அவரது நிலை தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விஷயத்தில் கிரிஸ்டினா ரோக்காவுக்கும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் கன்வால்சிபலுக்கும் இடையில் கூட முன்பு மோதல் நடந்துள்ளதும் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரியில்வாஷிங்டன் சென்றிருந்த சிபலுடன் ரோக்கா பேச்சு நடத்தியபோது பாகிஸ்தான் விஷயத்தில் இருவரும் மோதினர்.

பாகிஸ்தானை இந்தியா வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக ரோக்கா கூற அதை சிபல் வன்மையாகமறுத்ததோடு தீவிரவாதிகள் விஷயத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாகவும் கூறிவிட்டு வந்தார்.அதைத் தொடர்ந்து சி.ஐ.ஏவுக்கு அறிக்கை அனுப்பிய பிளாக்வில், இந்தியா விஷயத்தில் அமெரிக்கா இரட்டைவேடம் போடுவது நல்லதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

இவை எல்லாம் சேர்ந்து இப்போது பிளாக்வில்லை பழிவாங்கியுள்ளது.

இந்தியாவின் நியாயத்தை எடுத்துச் சொன்னதற்காக பழிவாங்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதருக்கு இந்தியாஎப்போதும் கடமைப்படுத்துள்ளது. பிளாக்வில்லைத் தொடர்ந்து கிரிஸ்டினா ரோக்காவின் ஆதரவாளர் யாராவதுதான் தூதராக வருவார் என்று டெல்லி எதிர்பார்க்கிறது. இதனால் கவலையும் அடைந்துள்ளது.

வருகிறது ஐ.நா. ஆயுத குழு:

இதற்கிடையே பாகிஸ்தானிடம் உயிரியல், ரசாயன ஆயுதங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரணைநடத்த ஐ.நா. ஆயுதக் குழு இம் மாத இறுதியில் பாகிஸ்தான் வர உள்ளது. அங்கு சோதனையை முடித்துவிட்டு இக்குழு இந்தியா வருகிறது.

ஐ.நாவின் ரசாயன ஆயுதத் தடை ஒப்பந்த்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளன. இதில்கையெழுத்திட்டுள்ள நாடுகள் தங்கள் ரசாயன ஆலைகளை சோதனையிட ஐ.நாவை அனுமதித்தாக வேண்டும்.

இந் நிலையில் இந்தியாவிடம் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் குவிந்துள்ளதாகவும் அதில் பல ஆயுதங்களைதனது அண்டை நாட்டில் இந்தியா மறைத்து வைத்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அதுஎந்த நாடு என்பதை பாகிஸ்தான் கூறவில்லை.

சீனாவுக்கு இந்தியா கோரிக்கை:

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு அணு ஆயுத, ஏவுகணைத் தயாரிப்பு உதவிகளைச் செய்ய வேண்டாம் எனசீனாவிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

அங்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தக் கோரிக்கையை வைத்தார்.பாகிஸ்தானுக்கு உதவுவதும் தீவிரவாதிகளுக்கு உதவவும் ஒன்று என அவர் வெளிப்படையாகவே சீனபாதுகாப்புத்துறை அமைச்சரிடமும் சீனப் பிரதமரிடமும் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X