ஹைதராபாத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளி கைது
ஹைதராபாத்:
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐயின் உளவாளி ஒருவரை ஹைதராபாத் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சாய்தாபாத்தில் உள்ள குர்மாகுடா பகுதியைச் சேர்ந்த முபாஷிர் ஹூசேன் என்ற அந்த உளவாளியைநேற்று போலீசார் கைது செய்தனர்.
சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யவும், துப்பாக்கிகளை இயக்கவும் இவன்பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ. அமைப்பிடம் சிறப்புப் பயிற்சி பெற்றவன். இந்தியாவில் பலநாசவேலைகளை செய்வதற்கு ஹூசேன் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது.
இவனுடன் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் ஹாரேன் பாண்டியா கொலை வழக்கு தொடர்பாககடந்த வாரம் 5 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இஸ்லாமியப் பாதுகாப்புப் படை" என்ற அமைப்பின் கீழ் இதுபோன்ற 15 பேர் இயங்கிவந்ததாகவும், அவர்களில் தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார்தெரிவித்தனர்.


