"தமிழகத்தில் 356ஐ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை"
கோயம்புத்தூர்:
அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில்ஏற்பட்டிருக்கவில்லை என்று தமிழக ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.
இக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜகோபால் இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம்கூறுகையில்,
356வது அரசியல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க வேண்டிய அளவுக்குநிலைமை ஒன்றும் மோசமாகப் போய்விடவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள்ளாகவேஇருக்கிறது.
இந்த அரசியல் சட்டப் பிரிவை ஐக்கிய ஜனதா தளம் ஏற்கனவே கடுமையாக எதிர்த்துக் கொண்டுவருகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரிவையே அரசியல் சட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்பதைத்தான் எங்கள் கட்சி வலியுறுத்துகிறது.
எனவே இந்தப் பிரச்சனையைத் தமிழக எதிர்க் கட்சிகள் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம்இல்லை.
தமிழகத்தில் பொடா சட்டம் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொடா சட்டத்தின்கீழ் "நக்கீரன்" பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளது தேவையே இல்லாதது.
எங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக மீண்டும் வந்துசேர்ந்து கொண்டுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் அனைவரும் வந்து இணைந்ததும் எங்கள் கட்சிமிகப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றார் ராஜகோபால்.


