ராஜஸ்தானிலும் சார்ஸ்?
ஜெய்ப்பூர்:
சார்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ம் தேதி அவர் அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து இந்தியா திரும்பினார். கடும் காய்ச்சல்,உடல் வலி மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின்னர் உடனடியாக தனி வார்டுக்கு மாற்றப்பட்ட அவரை டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாகக்கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருடைய ரத்த சாம்பிளும் டெல்லிக்குஅனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் சார்ஸ் நோய் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது இதுவேமுதல்முறையாகும்.
இதுவரை 203 பேர் பலி:
இந்நிலையில் உலகம் முழுவதும் சார்ஸ் நோய்க்கு இதுவரை 203 பேர் பலியாகி உள்ளனர். மேலும்சுமார் 4,000 பேர் இந்நோயால் பாதிப்படைந்துள்ளனர்.
சீனாவில் மட்டும் இதுவரை 97 பேர் இறந்துள்ளனர். மேலும் 2,158 சீன மக்கள் இந்நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 28 பேர் இறந்துள்ளனர்.
இதில் சீனா தரும் தகவல்கள் முழுமையாவை அல்ல. இறந்திருப்போர் எண்ணிக்கை பல மடங்குஇருக்கும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
அதேபோல் ஹாங்காங்கில் சார்ஸ் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99ஆகஅதிகரித்துள்ளது. இங்கு மொத்தம் 1,434 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


