For Daily Alerts
Just In
ஈராக்கிய ராணுவ உளவு பிரிவு தலைவர் கைது
வாஷிங்டன்:
அதிபர் சதாம் ஹூசேனின் ராணுவ உளவுப் பிரிவுத் தலைவர், ஈராக்கிய விமான எதிர்ப்புப் படையின் கமாண்டர்உள்பட 4 முக்கிய ஈராக்கிய உயர் அதிகாரிகள் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டுள்ளனர்.
அதே போல சதாமின் ராணுவ உளவுபி பிரிவின் தலைவர் ஜெனரல் ஜூகையிர் தாலிப் அப்த் அல்-சத்தாரும்அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். இவர் அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் 21வது இடத்தில்இருந்தார்.
இவர்கள் தவிர மேலும் 2 ஈராக்கிய ராணுவ உயர் அதிகாரிகளும் அமெரிக்காவிடம் பிடிபட்டுள்ளனர்.இதன்மூலம் இதுவரை அமெரிக்காவிடம் பிடிபட்ட ஈராக்கிய அதிகாரிகள், அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆகஉயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் அமெரிக்க குண்டு வீச்சில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சதாம் உள்பட மொத்தம் 55 பேரை அமரிக்கா தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளது. அமெரிக்காசேர்த்துள்ளது.


