2வது நாளாக மருத்துவ மாணவர்கள் போராட்டம்: சிரமத்தில் நோயாளிகள்
சென்னை:
தமிழகத்தில் தனியார் மருத்தவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பதைவலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 2வது நாளாகத் தங்கள்போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இந்திய மருத்துவக் கவுன்சில்அங்கீகாரம் பெறாத படிப்புகளுக்கு விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தர வேண்டும், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், கட்டண உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி இவர்கள் ஒருநாள்அடையாளப் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதற்கு மாநில அரசு கடும் மெளனம் சாதித்ததைத் தொடர்ந்து மருத்துவ மாணவ,மாணவிகள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.வகுப்புக்களைப் புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் 5ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களான ஹவுஸ்சர்ஜன்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வேலைகளைப் புறக்கணித்துள்ளனர். இதனால் அரசுமருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள்இல்லாமல் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதைச் சமாளிக்க கூடுதல் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுகூறியுள்ளது.
இதே போல பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 2வது நாளாக இவர்களுடைய போராட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளுக்குமருத்துவமனையின் வெளியில் வைத்தே சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹவுஸ் சர்ஜன்கள்அறிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் முன்பாக மாணவர்கள் இன்று மாபெரும்ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அதே போல திருச்சி, தஞ்சாவூரிலும் மனித சங்கிலிப்போராட்டத்தையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.
கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து பேரணி நடத்தினர்.


