பொடாவை வாபஸ் பெறக் கோரி வாஜ்பாயை சந்திக்கிறார் கருணாநிதி
சென்னை:
பொடா சட்டத்தை மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும், அதில் திருத்தம் கொண்டு வருகிறோம்என்ற மத்திய அரசின் அறிவிப்பை எல்லாம் ஏற்க முடியாது என்று திமுக தலைமையில் நடந்த எதிர்க் கட்சிகள்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ரப்பட்டது.
வைகோவை விடுவிக்கும் வரைதொடர் போராட்டத்தில் ஈடுபடுவது, பொடா சட்டத்திற்கு எதிராகநடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, திமுக தலைமையில் அனைத்துஎதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்க அதிமுக, பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் கருணாநிதி அழைப்புவிடுத்திருந்தார். தனித்தனியே அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதமும் அனுப்பியிருந்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் திமுக நீடிப்பதால் இக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என இந்தியகம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூறிவிட்டன.
விடுதலைப் புலிகளை வைகோ தொடர்ந்து ஆதரிப்பதாலும் இக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாககாங்கிரஸ் அறிவித்தது. விடுதலைச் சிறுத்தைகளும் இக் கூட்டத்தை புறக்கணித்தது.
எனவே, இந்தக் கட்சிகள் தவிர பிற கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடந்தது.
இதில் தி.மு.க. சார்பில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், திருச்சி சிவா உள்ளிட்டோர்கலந்துகொண்டனர். பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ், மதிமுக சார்பில் எல்.கணேசன், புதிய தமிழகம் டாக்டர்கிருஷ்ணசாமி, எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஆர்.எம்.வீரப்பன், காங்கிரஸ் ஜனநாயக பேரவை சார்பில் புரசைரங்கநாதன், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் டாக்டர் சேதுராமன் மற்றும் இந்திய தேசியமுஸ்லீம் லீக் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இக் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
பொடா சட்டத்தை ஜெயலலிதா உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் தவறாகப் பயன்படுத்திவருகின்றனர்.
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று நாடாளுமன்றத்தில் துணைப் பிரதமர் அத்வானிஉறுதிமொழி கொடுத்தார். ஆனால் அதையும் மீறி தமிழகத்தில் பொடா சட்டம் அரசியல்ரீதியாக பழி வாங்கபயன்படுத்தப்பட்டு வருகிறது.
வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் மீதும், நக்கீரன் கோபால் போன்றபத்திக்கையாளர் மீதும் பொடா சட்டம் ஏவி விடப்பட்டுள்ளது
இதனால் இச் சட்டத்தை முழுமையாக வாபஸ் பெறுவது தான் நியாயமாக இருக்கும்.அதைவிட்டுவிட்டு சட்டத்தில் திருத்தம் செய்கிறோம் என்று மத்திய அரசு கூறுவதை எல்லாம் ஏற்கமுடியாது.
அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் மத்திய அரசால் முடியவில்லை. பொடாவைவாபஸ் வாங்கினால் மட்டும் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும்.
டெல்லியில் இரு தினங்களுக்கு முன் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்திலும் பொடாவுக்கு எதிராகதேசிய அளவில் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாங்களும் இதே கோரிக்கையைத் தான் வைக்கிறோம். சமீபத்தில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்ததிமுக, பா.ம.க., மதிமுக எம்பிக்களும் பொடாவை ஒட்டுமொத்தமாக வாபஸ் பெறுமாறு கோரிக்கைவைத்தனர். அதை பரிசீலிப்பதாக வாஜ்பாயும் உறுதியளித்திருக்கிறார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வாஜ்பாயை நான் நேரிலும் சந்தித்துப் பேச இருக்கிறேன்என்றார் கருணாநிதி.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டதில் மேலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம்
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை இந்தக் கூட்டம் வன்மையாகக்கண்டிக்கிறது. இலவச மின்சாரத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
சட்டசபையில் எதிர்க்கட்சியினர் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களது பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. மீறிப்பேசினால் தண்டனை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்து விடுகிறார்கள்.
ராணி மேரிக் கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக பேசச் சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதுபொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ளதை இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்று தீர்மானத்தில்கூறப்பட்டுள்ளது.
மாலையில் பொதுக் கூட்டம்:
இன்று மாலை சைதாப்பேட்டை பஜார் வீதியில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள்கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
காங்கிரஸ் ஆதரவு:
திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொடா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.


