பெங்களூருக்கும் பரவியது சார்ஸ்
பெங்களூர்:
பெங்களூரில் சார்ஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் ஒருவர் மணிப்பால் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் அவர் சமீபத்தில்தான் கனடாவிலிருந்து பெங்களூருக்கு வந்தார்.
விடுமுறைக்காக வந்திருந்த அந்த 24 வயது வாலிபருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்துதனியார் மருத்துவமனையான மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சார்ஸ் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். அவரை தீவிரமாகப்பரிசோதித்து வருகின்றனர். அவருடைய ரத்த சாம்பிள்களில் பரிசோதனைகள் நடந்து வருவதாகமருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் மாலதி தெரிவித்தார்.
இந்த வாலிபர் குறித்து பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.அவருடன் வந்த பிற பயணிகள் குறித்து விசாரித்து, அவர்களில் யாருக்காவது காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட உள்ளது.
கனடா செல்ல தடை:
இதற்கிடையே சார்ஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் டொராண்டோ நகருக்கும், சீனாவின்பெய்ஜிங் நகருக்கும் செல்ல வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குடொராண்டோ நகர மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள அளவுக்கு கனடாவில் பெரிய அளவில் பிரச்சனை ஏதும் இல்லை எனவும், உரிய ஆய்வைநடத்தாமல் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் டொராண்டோ நகர மேயர்குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே கனடாவில் சார்ஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
சீனாவில் மருத்துவமனையே மூடல்:
சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெய்ஜிங்கின் மிகப் பெரிய மருத்துவமனையைச் சேர்ந்த பலடாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்களும் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அந்த மருத்துமனையேமூடப்பட்டுவிட்டது.
பெகிங் பல்கலைக்கழகத்தில் இருந்த அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2,000 பேரும்தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சார்ஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நோய் சிறைச்சாலைகளுக்குப் பரவுவதைத் தடுக்க சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கைதிகளைச் சந்திக்கயாருக்கும் அனுமதி தர வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல சிறைச்சாலை ஊழியர்களும்வீடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாசிக் நோயாளிக்கு சார்ஸ் இல்லை:
இதற்கிடையே சார்ஸ் இருப்பதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாசிக் நகரைச் சேர்ந்த கிரிசுரேஷ்சந்த் (23) என்பவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு அந்த நோய் இல்லை என்றுதெரியவந்துள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருக்கு சார்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இவர் கடந்த18ம் தேதி அமெரிக்காவில் இருந்து புனே திரும்பினார். அவருக்கு காய்ச்சலும் மூச்சித் திணறலும் ஏற்பட்டதால்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


