காஷ்மீர் கவர்னராக எஸ்.கே. சின்ஹா நியமனம்
ஜம்மூ:
ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் அடுத்த ஆளுநராக முன்னாள் ராணுவ அதிகாரியான எஸ்.கே. சின்ஹாநியமிக்கப்படுகிறார்.
ஒய்வுபெற்ற ராணுவ லெப்டினண்ட் ஜெனரலான சின்ஹா முன்பு அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்தவர்.தீவிரவாதிகளை கையாள்வதில் நிபுணராகக் கருதப்படுபவர். உல்பா தீவிரவாதத் தலைவர்களின் பெற்றோரைநேரில் சந்தித்து பேச்சு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
தீவிரவாதிகள் தங்கள் பெற்றோரைச் சந்திக்க பாதுகாப்பாக வந்து செல்லவும் வழி ஏற்படுத்தித் தந்தார். அதே நேரம்அவர்களை பேச்சுவார்த்தைக்கும் வரச் செய்தார்.
இவரை காஷ்மீர் ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவரை ஆளுநராக்க காஷ்மீர் முதல்வர்முப்தி முகம்மத் சயீதும் ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் மே 1ம் தேதி இவர் ஆளுநர் பொறுப்பை ஏற்பார்.
இப்போது காஷ்மீர் ஆளுநராக உள்ள சரத் சந்திர சக்ஸேனாவின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து சின்ஹாஅந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார்.
1990ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையும், பின்னர் மீண்டும் 1998ம் ஆண்டு முதல் இப்போது வரையும்சக்ஸேனா காஷ்மீர் கவர்னாக பதவி வகித்து வருகிறார்.
இப்போது அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.சக்ஸேனாவும் முன்னாள் ராணுவ அதிகாரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.


