ஒரு வழி பாதையாகிறது மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை
ஊட்டி:
விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நெருக்கடியைச் சமாளிப்பதற்காகமேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
கோடை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டே வருகிறது.
பெரும்பாலான பயணிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து ப்ளூ மவுன்ட்டன் எனப்படும் மலைரயிலிலேயே ஊட்டிக்குச் சென்று வந்து கொண்டிருந்தனர். ஆனால் கடந்த வாரம் வரலாற்றிலேயேமுதல் முறையாக அந்த மலை ரயில் வழியிலேயே தடம் புரண்டது.
இதையடுத்து மலை ரயில் போக்குவரத்து முழுவதுமாக நின்று போய் விட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மிகவும் அதிருப்தி அடைந்திருந்தாலும் சாலை வழியாகவே ஊட்டிக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாலை வழியாக ஊட்டிக்கு வரும் வாகனங்களின்எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும்ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்ப்பதற்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப் பாதை ஒரு வழிப் பாதையாகமாற்றப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் மே மாதம் இறுதி வரை இந்தப் பாதை ஒரு வழிப் பாதையாகவே செயல்படும்என நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.
ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்குச் செல்லும் வாகனங்கள், கோத்தகிரியிலிருந்து வேறுபாதை வழியாகத் திருப்பி விடப்படும்.


