காஷ்மீர் டிவி- ரேடியோ நிலையம் மீது தற்கொலை தாக்குதல்: 3 தீவிரவாதிகள், 2 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இன்று இரண்டாவது நாளாக தீவிரவாதிகள் தொடர்ந்து தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர்.
ரேடியோ மற்றும் தொலைக் காட்சி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும், 2மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் 7 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரின் மையப் பகுதியில் உள்ள பலத்த பாதுகாப்புள்ள ரேடியோ, தொலைக் காட்சி நிலையங்களின்வளாகத்தின் மீது இன்று பகலில் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு அம்பாஸிடர் காரைக் கொண்டு தீவிரவாதிகள்மோதினர். இதில் அந்தக் கார் வெடித்துச் சிதறியது.
இந்த காரைவிட்டு வெளியே குதித்த தீவிரவாதி அங்கு காவலில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ்படையினரை நோக்கி சுட்டான். இதையடுத்து வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையில் மேலும் இருதீவிரவாதிகள் அங்கு வந்து தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இதில்ஒரு தீவிரவாதியும் இரு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து 2 தீவிரவாதிகள் தப்பித்து அருகில் உள்ள பள்ளிவாசலுக்குள் புகுந்தனர். ஆனால், ரிசர்வ் போலீஸ்படையினரும் உள்ளே நுழைந்து இரு தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில்பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
அல்-மதீனா பொறுப்பேற்பு:
இதற்கிடையே காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு அல்-மதீனா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று கூறிய ஒரு நபர் காஷ்மீர் பிரஸ் சர்வீஸ் செய்தி நிறுவனத்தைதொடர்பு கொண்டு இதைத் தெரிவித்தார்.
மேலும் என்.என்.வோராவைக் கொண்டு காஷ்மீர் அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த முடிவுசெய்துள்ளதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானையும் பங்கேற்கச்செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
ஐ.எஸ்.எஸ். செயல்:
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த பிரதமர் வாஜ்பாய் முன் வந்துள்ளார். இதற்கு பாகிஸ்தானிய அரசியல் கட்சிகள்,மக்களிடையே வரவேற்பு இருந்தாலும் அதை அந் நாட்டு ராணுவம் விரும்பவில்லை.
இதனால் தான் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு காஷ்மீரில் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம்தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய உளவுப் பிரிவுகள் கூறியுள்ளன. காஷ்மீர் பிரச்சனை இருக்கும் வரை தான்ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இருக்க முடியும் என்பதால் இந்தச் செயலில் பாகிஸ்தானின் ராணுவஉளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா கவலை:
காஷ்மீரில் கொஞ்ச காலமாய் குறைந்திருந்த தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளதையடுத்துஅமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுடன்அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரபுடன், அமெரிக்க அமைச்சர் காலின் பாவல் நேற்றுதொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீரில் மீண்டும் தொடங்கியுள்ள வன்முறை குறித்து விவாதித்தார்.


