For Daily Alerts
Just In
காவல் நிலையத்தில் 4 நாள் கையெழுத்து: மதுரையில் இருந்து கிளம்பினார் ஸ்டாலின்
மதுரை:
நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 4 நாட்களாக மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில்கையெழுத்திட்டு வந்த மு.க. ஸ்டாலின் இன்று அங்கிருந்து சென்னை கிளம்பினார்.
இதையடுத்து மதுரையில் அவர் இருந்தார். தல்லாகுளம் காவல் நிலையத்தில் உட்கார தனக்கு சேர் தரப்படாததால்தானே ஒரு மடக்கு நாற்காலியை எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்து கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினார்.
மதுரையில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இன்றும் ஸ்டாலின் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். நாளை முதல் சென்னையில் காவல் நிலையத்தில்தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும்.
இதையடுத்து இன்று மதுரையில் இருந்து அவர் கிளம்பினார். தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருந்து 100 கார்கள்அணி வகுக்க அவர் சென்னைக்குப் புறப்பட்டார்.


